Close

Village Assistant Job-Dindigul West

Publish Date : 10/11/2020

செ.வெ.எண்:-06/2020

நாள்:- 06.11.2020

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மேற்கு வட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

திண்டுக்கல் மேற்கு வட்டம், பன்றிமலை, கோடல்வாவி, தோணிமலை, சிரங்காடு, பலக்கனூத்து, அலக்குவார்பட்டி ஆகிய கிராமங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியுள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. காலிப்பணியிடம் உள்ள கிராமம் மற்றும் இட ஒதுக்கீடு விபரங்கள் வருமாறு:

பன்றிமலை – மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அல்லது சீர்மரபினர் மட்டும். மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அல்லது சீர்மரபினர் வகுப்பினரைச் சேர்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். கோடல்வாவி மற்றும் பலக்கனூத்து – பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் முஸ்லிம் நீங்களாக) வகுப்பினரைச் சேர்ந்த இருபாலரும் விண்ணப்பிக்கலாம். தோணிமலை- மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அல்லது சீர்மரபினர்வகுப்பினரைச் சேர்ந்த இருபாலரும் விண்ணப்பிக்கலாம். சிரங்காடு- பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் முஸ்லிம் நீங்களாக) வகுப்பினரைச் சேர்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். அலக்குவார்பட்டி – பழங்குடியினர் (பொது) வகுப்பினரைச் சேர்ந்த இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 5-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது 01.08.2020 அன்று குறைந்தபட்சம் 21 ஆண்டுகள், அதிகபட்சம் 35 ஆண்டுகள்(அதிகபட்சம் இதர பிரிவு 30 வயது, பி.வ./மி.பி.வ. /32 வயது, தா.வ./பழங்குடியினர் 35 வயது) இருக்க வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, மேற்படி பதிவு, நாளது தேதிவரை புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் நபர்கள் அந்தந்த கிராமத்தைச் சேர்ந்தவராகவோ, அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்தவராகவோ இருக்க வேண்டும். தகுதியுடைய நபர்கள் தங்கள் கல்வித் தகுதி, இருப்பிடம், வயது, சாதி குறித்த ஆவணங்களின் நகல்களுடன் விண்ணப்பத்தை 20.11.2020-ம் தேதிக்குள் திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியருக்கு அனுப்பி வைத்திட வேண்டும் என திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் திரு.அ.அபுரிஸ்வான் அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், திண்டுக்கல்.