Village Level Child Protection Committee

செ.வெ.எண்:-72/2022
நாள்:26.04.2022
திண்டுக்கல் மாவட்டம்
கிராம அளவிளான குழந்தை பாதுகாப்பு குழுக்களை வலுப்படுத்துதலுக்கான பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன்,இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார்.
திண்டுக்கல் மாவட்டம், பி.வி.கே மஹாலில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, தோழமை மற்றும் யுனிசெஃப் ஒருங்கிணைந்து கிராம அளவிலான குழந்தை பாதுகாப்பு குழுக்களை வலுப்படுத்துதலுக்கான பயிற்சி முகாமினை இன்று(26.04.2022) மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன்,இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்து தெரிவித்ததாவது
18 வயதிற்குட்பட்ட அனைவரும் குழந்தைகள் ஆவர். ஜாதி, மதம், பால், மொழி, இனம், பிறப்பு, உடல், நிறம் போன்ற எந்தப் பாகுபாடுகளும் இன்றி குழந்தைகளின் வயது பிறந்த குழந்தை முதல் 3 வயது வரை மழலைப்பருவம், 3 வயதிலிருந்து 6 வயது வரை முன் பள்ளிப்பருவம், 6 வயது முதல் 8 வயது வரை பள்ளிப்பருவம், 10-12 வயது வரை வளரிளம் பருவ முதல்நிலைபருவம், 13-15 வயது வரை வளரிளம் பருவ இரண்டாம் நிலை, 16-18 வயது வரை வளரிளம் பருவ மூன்றாம் நிலை வயதுக்கேற்ப குழந்தைகளின் எண்ணங்கள், செயல்பாடுகள், இதைபுரிந்து கொண்டு இயக்க வேண்டும்.குழந்தை பிறந்த நாளிலிருந்து இளம்பருவம் அடையும் வரை அதாவது 18 வயது நிறைவடையும் வரை அந்த குழந்தையின் குடும்ப உறவினை மேம்படுத்தி குழந்தைகளுக்கு எதிரான தீங்கிழைத்தல், பாலியல் ரீதியாக சுரண்டல், ஒதுக்குதல், குழந்தை தொழிலாளர், குழந்தை கடத்தல் ஆகிய தீமைகளிலிருந்து குழந்தைகளை பாதுகாத்தல் மற்றும் அதற்கான அரசு, அரசு சாரா சேவைகளை வகுத்து செயல்படுத்த வேண்டும்.
சமீபகாலமாகப் பெருகி வரும் நர்சரிப்பள்ளி கலாச்சாரத்தால் அங்கன்வாடியில் குழந்தைகளுக்குக் கிடைக்க வேண்டிய ஆரம்பகால குழந்தைப் பாதுகாப்பின்படிகளான உடல் எடை எடுத்தல், சத்து மாத்திரை உண்டு இறத்த சோகை தவிர்த்தல், சரிவிகித சத்தான உணவு உட்கொள்ளல், பிற குழந்தைகளுடன் இணைந்து ஆடல், பாடல் போன்றவற்றில் கிடைக்கும், நட்புச்சுழலை குழைந்தைகள் பெற முடியாமல் போய்விடுகிறது அத்துடன் குழந்தைகள் பள்ளிகளில் பயிலும் போது அவர்களின் சுதந்திரமான கருத்துக்களுக்கு மதிப்பளித்து, வாய்ப்பளிக்க மறுத்தல் அத்தகைய குழந்தைகள் மன உளச்சலுக்கு ஆளாகி, பயந்த சுபாவத்துடன் வளர்வதற்கு வாய்பாகி விடுகிறது. அத்துடன் பள்ளிப்படிப்பை முடித்து, கல்லூரிக்குச் செல்லும் போது எத்தகைய கல்வி குழந்தைக்கு ஏற்றது என்பதை குழந்தைகளிடம் பெற்றோர்கள் கலந்து ஆலோசிப்பதில்லை. குழந்தைக்கு பிடித்தமான கல்வி மறுக்கப்பட்டால் நம் ஆசை நிறைவேறலாம். குழந்தை விருப்பமின்றி படிப்பதை மனம் ஒப்பா படிப்பாக மார்க் வாங்குவதற்குப் படிக்கும் படிப்பாக அமைந்துவிடும். அதிக அளவிலான பெண் குழந்தைகளுக்கான உயர்கல்வி மறுக்கப்படுகிறது. திருமண பந்தத்திற்குள் தள்ளப்படுகிறார்கள். உயர்க்கல்வி பெண் குழந்தைகளுக்கு மறுக்கப்பட்டால், குழந்தைத் திருமணத்திற்குள் தள்ளப்படுகிறார்கள் என புள்ளி விபரங்கள் தெரிவிக்கிறது. தமிழ்நாட்டில் 16மூ பெண்கள் 18 வயதுக்கு முன்பாகவே திருமணம் என்ற மாயைக்குள் தள்ளப்படுகிறார்கள். உலக அளவில் குழந்தைகள் திருமணத்திற்குள் தள்ளப்பட்டவர்களில் 40% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்களே, எனவே, மறுப்பு என்பது குழந்தை உரிமை மீறலாகப் பார்க்கப்படவேண்டும். அப்படிப்பட்ட பார்வை வந்தால் தான் பல்லாயிரக்கணக்கான குழந்தைகளின் உரிமைகள் பாதுகாக்கப்படும்.குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும். பெற்றோர்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும். குழந்தை திருமணத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும். உறவு முறை திருமணத்தை தவிர்க்க வேண்டும். குள்ளமாகவும், ஊட்ட சத்துகுறைபாடு உள்ள குழந்தைகளுக்கு பெற்றோர்கள் தனிகவனம் செலுத்தி அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்து உணவுகளை வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.
முன்னதாக, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, தமிழ்நாடு சார்பாக ”குழந்தைகளைக் கொண்டாடுவோம்” என்ற கையேட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப.இ அவர்கள் வெளியிட்டார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திரு.ந.சிவக்குமார், சமூக செயற்பாட்டாளர் திரு.ஆல்பர்ட், இயக்குநர், தோழமை திரு.அ.தேவநேயன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்