Close

Water Source

Publish Date : 25/07/2019

செ.வெ.எண்:69/2019 நாள்:-25.07.2019

திண்டுக்கல் மாவட்டம்

குடிநீர் பணிகளுக்கு முன்னுரிமை அளித்து, பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., தகவல்.

மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் திரு.சி.சீனிவாசன் அவர்களின் தலைமையில், மாவட்ட ஆட்சியரகத்தில், குடிநீர் தொடர்பாக ஆய்வுக் கூட்டம், திண்டுக்கல் மாவட்டத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில், சம்பந்தப்பட்ட அனைத்து துறை சார்ந்த அலுவலர்களுடன் நடத்தப்பட்டது.

அந்த ஆய்வுக் கூட்டத்தில், பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாட்டினை சரி செய்து சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்ய அறிவுரைகள் வழங்கப்பட்டது. குடிநீர் தட்டுப்பாட்டினை தீர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், அதற்கான புதிய பணிகளை செய்வதற்கும் ஆய்வுக் கூட்டத்தில் மாண்புமிகு வனத்துறை அமைச்சர் அவர்களால் தெரிவிக்கப்பட்டது.

அந்த ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறையின் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் 2 திறந்த வெளி கிணறுகள் தூர்வாரும் பணி ரூ.11.12 இலட்சத்தில், 2 ஆழ்துளை கிணறுகள் சுத்தப்படுத்தும் பணி ரூ. 4.56 இலட்சத்தில், 46 புதிய ஆழ்துளை கிணறுகள் அமைத்தல் பணி ரூ.189.64 இலட்சத்தில், 38 ஆழ்துளை கிணறுகள் ஆழப்படுத்துதல் பணி ரூ.120.21 இலட்சத்தில், அதிக குதிரை திறன் கொண்ட மின்மோட்டர் மாற்றுதல் 3 பணிகளுக்கு ரூ.8.53 இலட்சத்தில், 2 மேல்நிலைத்தொட்டி அமைத்தல் பணி ரூ.17.60 இலட்சத்தில், 2 குடிநீர் குழாய் விரிவாக்கப்பணி ரூ.14 இலட்சத்தில் ஆக மொத்தம் 95 குடிநீர் பணிகள் ரூ.365.66 இலட்சம் மதிப்பிலான பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது.

மேலும், மண்டல அலுவலர்களுக்கு ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமைதோறும் குடிநீர் விநியோக பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. வட்டார அளவில் மண்டல அலுவலர்களால் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலர்களுக்கு வாரந்தோறும் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு, தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டு, குடிநீர் பணிகளுக்கு முன்னுரிமை அளித்து, பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சி;த்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்