Close

Water supply Collector review meeting

Publish Date : 03/07/2019
wsm

செ.வெ.எண்:-3/2019 நாள்:02.07.2019

wsp1

திண்டுக்கல் மாவட்டத்தில் தடையின்றி குடிநீர் வழங்க சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் துரித நடவடிக்கை மேற்க்கொள்ள வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி.இ.ஆ.ப., அவர்கள் அறிவுறுத்தல்.

திண்டுக்கல் மாவட்டத்தில் நகர்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் குடிநீர் வழங்குதல் தொடர்பான ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி. இ.ஆ.ப., அவர்கள் தலைமையில்; நடைபெற்றது.

தற்போதைய கடும் கோடைக்காலத்தில் உள்ளுர் குடிநீர் ஆதாரங்கள் வறண்டு வரும் நிலையில், கூட்டுக் குடிநீர்த்திட்டங்களின் மூலம் கிடைக்கப் பெறும் தண்ணீரைக் கொண்டு குடிநீர் விநியோகம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. எனவே, தேவைப்படும் குடியிருப்புகளுக்கு கூடுதலாக டேங்கர் லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்திட வேண்டும். டேங்கர் லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்யும் பொழுது மேல்நிலைத் தொட்டி அல்லது ளுiவெநஒ தொட்டியில் ஏற்றி குளோரினேசன் செய்து குடிநீர் வழங்கப்படுதல் வேண்டும்.

திண்டுக்கல் மாநகராட்சி, கொடைக்கானல், பழனி, ஒட்டன்சத்திரம் ஆகிய நகராட்சிகள், அனைத்து பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், சம்பந்தப்பட்ட குடிநீர் வடிகால் வாரியத்தினருடன் இணைந்து ஒவ்வொரு வாரமும் ஆய்வுக்கூட்டம் நடத்தி, தண்ணீர் பற்றாக்குறையுள்ள குக்கிராமங்களுக்குத் தேவையான அளவு தண்ணீர் வழங்க திட்டமிடல் வேண்டும்.

மேலும் மாவட்டத்தில் உள்ள அந்தந்த பகுதிகளைச் சார்ந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள், செயல் அலுவலர்கள் மற்றும் நகராட்சி ஆணையாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் தங்களது பகுதியில் சீரான குடிநீர் விநியோகம் செய்யவும், அப்பகுதியில்
குடிநீர் தேவைகள் குறித்தும், கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அனைத்து அலுவலகங்களிலும் குடிநீர் புகார் தொடர்பான கட்டுப்பாடு அறை ஏற்படுத்தி, குடிநீர் தொடர்பான புகார்களை பெற அலுவலர் ஒருவரை நியமிக்க வேண்டும். அது குறித்து பொதுமக்கள் அறியும் வகையில் விரிவான விளம்பரம் செய்திட வேண்டும்.

மேலும் பெறப்படும் புகார்களை புகார் பதிவேடு பராமரித்து அதில் பதிவு செய்து, துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் மின்மோட்டார், பைப்லைன் பழுது உடனுக்குடன் சரிசெய்து தங்கு தடையின்றி குடிநீர் வழங்கப்பட துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி.இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திருமதி. கவிதா, உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) திரு. கருப்பையா உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.