Close

World Disabled Day

Publish Date : 03/12/2021
.

.

செ.வெ.எண்:-09/2021

நாள்:03.12.2021

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் இனிப்புகள் வழங்கினார்கள்.

மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை நினைவுகூறும் வகையில், ஆண்டுதோறும் டிசம்பர் 3-ஆம் தேதி சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதைமுன்னிட்டு, திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(03.12.2021) திண்டுக்கல் மா.மு.கோவிலூர் விலக்கு அருகில் உள்ள மனவளர்ச்சி குன்றியோருக்கான அம்மா இல்லத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு இனிப்புகள் வழங்கி தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்ற பின்னர், மாற்றுத்திறனாளிகள் நலனில் பெரிதும் அக்கறை கொண்டு, அவர்கள் முன்னேற்றத்திற்கு தனியாக துறையை உருவாக்கி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து, பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.

மாற்றுத்திறனாளிகள் நல மேம்பாட்டிற்காகவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் கல்வி கற்றிட ணே;டும் என்பதற்காகவும், அவர்களின் தாழ்வுமனப்பான்மையினை போக்கி, பொருளாதாரம் மற்றும் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவைகளை மேம்படுத்தி, சமூக அளவில் அவர்களின் வாழ்க்கைத்தரத்தினை உயர்த்திட வேண்டும் என்பதனைக் கருத்தில் கொண்டும். மாற்றுத்திறனாளிகள் நலன் சார்ந்த எண்ணற்ற திட்டங்களை ஏற்படுத்தி தமிழக அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

அரசின் நலத்திட்டங்கள்;, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் சென்றடையும் வகையில், மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் மாவட்ட சார்பு நீதிபதி திரு.ஆர்.பாரதிராஜா, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் திருமதி மு.ஜெயசீலி, அம்மா இல்லம் நிர்வாகி திரு.இ.என்.பழனிச்சாமி உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.