Close

World Environment Day – Tree Plantation

Publish Date : 06/06/2022
.

செ.வெ.எண்:-16/2022

நாள்:05.06.2022

திண்டுக்கல் மாவட்டம்

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் மரக்கன்று நடவு செய்தார்.

திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் மாநகராட்சி 32-வது வார்டு ராஜலட்சுமி நகர் பகுதியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை(ஜுன் 5-ஆம் தேதி) முன்னிட்டு மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(05.06.2022) நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மரக்கன்றுகள் நடவு செய்து தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமி;ழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழக வனப்பகுதியை 33 சதவீதம் அளவிற்கு அதிகரிக்க உத்தரவிட்டு, வனப்பரப்பை அதிகரிக்க தமிழ்நாடு பசுமை இயக்கம் திட்டத்தின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்.

அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2 நாட்களுக்கு முன்னர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு தோட்டனூத்து பகுதியில் இலங்கைத் தமிழர் மறுவாழ்பு முகாமில் 1000 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. மேலும், வனத்துறை சார்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் 20 இலட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் இன்று மரக்கன்றுகள் நடவு செய்யப்படுகின்றன.

பொதுமக்களும் தங்கள் வீடுகளை சுற்றியுள்ள காலியிடங்களில் மரக்கன்றுகள் நடவு செய்து பராமரித்து, தமிழகத்தை பசுமை மாநிலமாக மாற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி துணை மேயர் திரு.ராஜப்பா, மண்டல குழுத்தலைவர் திரு.ஜான்பீட்டர், மாநகராட்சி உறுப்பினர்கள் திரு.ஜோதிபாசு, திருமதி காயத்திரி, நகரமைப்பு ஆய்வாளர் திருமதி சந்திரா, உதவி பொறியாளர் திரு.சித்தன், திரு.நவநீதகிருஷ்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.