மூடு

படைக்கலன் ஒப்படைத்தல்.

வெளியிடப்பட்ட தேதி : 17/03/2026

செ.வெ.எண்:-52/2026

நாள்:-16.03.2026

திண்டுக்கல் மாவட்டம்

பத்திரிகை செய்தி

இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – 2026 அறிவிப்பு வெளியிடப்பட்டு, தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளான 15.03.2026 முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரப் பெற்றுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் உரிமம் பெற்ற படைக்கலன்களை படைக்கலன் உரிமதாரர்கள், தங்களது எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் உடனே ஒப்படைத்து, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட ஒரு வார காலத்திற்குப் பிறகு, காவல் நிலையங்களிலிருந்து திரும்ப பெற்றுக் கொள்ளலாம். இந்நேர்வில், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரப் பெற்றுள்ளதால், குற்றவியல் நடைமுறைச் சட்டம்-1973, பிரிவு-144-ன் கீழ் மாவட்ட நிருவாக நடுவர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர், திண்டுக்கல் பிறப்பித்துள்ள உத்தரவின் படி, படைக்கலன்களை பொது இடங்களுக்கு எடுத்துச்செல்வது தண்டனைக்குரிய குற்றமாகும். படைக்கலன் உரிமம் பெற்ற உரிமதாரர்கள் தங்களது படைக்கலன்களை உடனடியாக சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களில் ஒப்படைப்பு செய்து, உரிய ஒப்புதல் ரசீதினை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.