மூடு

தொழிலாளர்கள் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை

தொழிலாளர் துறை தொழிலாளர் நல சட்டங்கள், எடையளவு சட்டங்கள் மற்றும் தொழிற்தகராறு சட்டம் ஆகியவற்றினை செயல்படுத்தி வருவதின் மூலம் தொழில் அமைதி மற்றும் தொழிலாளர் நலன் உறுதி செய்யப்படுகிறது.குழந்தை தொழிலாளர் ஒழிப்பு எடையளவு சட்ட அமலாக்கம் மீட்க்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர்களுக்கு நிவாரண நிதி வழங்குதல் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பு ஆகியன இத்துறையின் முக்கிய செயல்பாடு ஆகும்.

இம்மாவட்டத்தில் தொழிலாளர் உதவி ஆணையர் அமலாக்கம் பல்வேறு வகையான தொழிலாளர் நல சட்டங்கள் மற்றும் எடையளவு சட்டம் ஆகிய சட்டங்களை தொழிலாளர் துணை ஆய்வர்கள் மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வர்கள் ஆகிய கீழ்நிலை அலுவலர்களை கொண்டு அமலாக்கம் செய்து வருகிறார்.தொழிலாளர் துணை ஆய்வர்கள் மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வர்கள் தொழிலாளர் நல சட்டங்கள் மற்றும் எடையளவு சட்டம் ஆகியவற்றை முனைப்புடன் அமலாக்கம் செய்வதன் மூலமாக தொழிலாளர் நலன் மற்றும் நுகர்வோர் நலன் பாதுகாக்கப்படுகிறது.

கொத்தடிமை தொழிலாளர் :

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையிடமிருந்து கொத்தடிமை தொழிலாளர் முறை தொழிலாளர் நலத்துறைக்கு GO.Ms.No.44,L&E நாள் : 10.03.2017 என்ற அரசாணையின்மூலமாக மாற்றப்பட்டது இதன்மூலம் மீட்க்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர்களுக்கு ரூ.20,000/-உடனடி நிவாரண நிதியாக முதல் தகவல் அறிக்கை,விசாரணை அறிக்கை மற்றும் விடுதலை சான்றிதழ்கள் அடிப்படையில் வழங்கப்படுகிறது.

குழந்தை தொழிலாளர்முறை ஒழிப்பு :

குழந்தை தொழிலாளர் சட்டம் 1986, குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலுமாக தடை செய்துள்ளது குழந்தைகளின் உரிமைகளையும் நலன்களையும் உறுதி செய்வதில் மாவட்ட நிர்வாகம் முன்னிலையில் நின்று செயலாற்றி வருகிறது தமிழக அரசு ஒருங்கிணைந்த பல்துறை நடவடிக்கைகள் மூலம் இம்முறையை ஒழிக்க உறுதி புண்டுள்ளது. 01.09.2016 தேதிய சட்டத்திருத்தினையும் தூரிதமாக செயல்படுத்தி வருகிறது.மாவட்ட ஆட்சியர் தலைமையில் பல துறைகளை உள்ளடக்கிய குழு தூரிதமாக செயல்பட்டு இம்முறையை முற்றிலுமாக ஒழிக்க செயல்பட்டு வருகிறது.கடந்த ஆண்டு மட்டும் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பிற்காக 1143 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு நான்கு குழந்தை தொழிலாளர்கள் மீட்க்கப்பட்டனர் சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு மேற்படி குழந்தைகள் கிருஷ்ணகிரி குழந்தைகள் நல குழுவிடம் ஒப்படைக்கப்பட்டு அவர்களின் மறுவாழ்வு மற்றும் கல்வி உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 12 ம் நாள் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.