மூடு

2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கு ஆயத்தமாக, மாவட்டத் தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் மாநகராட்சி அலுவலகத்திற்கு நேரில் சென்று 132-திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதிக்கு ஒதுக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை (EVM) ஆய்

வெளியிடப்பட்ட தேதி : 18/03/2026

செ.வெ.எண்:-53/2026

நாள்:-17.03.2026

திண்டுக்கல் மாவட்டம்

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026 நடைபெறவுள்ளதை முன்னிட்டு,132-திண்டுக்கல் சட்டமன்ற தொகுதிக்கு மாநராட்சி அலுவலகத்தில் ஒதுக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு வைப்பறையினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026 நடைபெறவுள்ளதை முன்னிட்டு, 132-திண்டுக்கல் சட்டமன்ற தொகுதிக்கு மாநராட்சி அலுவலகத்தில் ஒதுக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு வைப்பறையினை இன்று (17.03.2026) மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-

இந்தியத் தேர்தல் ஆணையத்தால், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026 நடைபெறுவது குறித்த கால அட்டவணை (Announcement of Election) (15.03.2026)-அன்று வெளியிடப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகளுக்கும் சேர்த்து மொத்தம் 2,301 (முதன்மை வாக்குச்சாவடிகள் 2301) வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026 அறிவிக்கை வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தனித்தனியாக தேர்தல் தொடர்பான புகார்கள் குறித்து விசாரணை மற்றும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், வாகனங்கள் தணிக்கை செய்வதற்கு தேர்தல் கண்காணிப்பு குழுக்கள் நியமனம் செய்யப்பட்டு சோதனை செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரையில் 127- பழனி சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பறக்கும் படையினரால் ரூ.92,500/-மும் மற்றும் 128-ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் ரூ.96,500/-மும் என மொத்தம் ரூ.1,89,000/- பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

. . .
. . .

தொடர்ந்து, 132-திண்டுக்கல் சட்டமன்ற தொகுதிக்குக்குட்பட்ட ரவுண்டு ரோடு மற்றும் திண்டுக்கல் முதல் இ.பி.காலனி வரையில் உள்ள சாலையில் தேர்தல் பாதுகாப்பு குழு வாகனத் தணிக்கை பணிகளையும், 133-வேடசந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விட்டல்நாயக்கன்பட்டி செயின்ட் பேட்ரிக் பள்ளியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்தும், வேடசந்துார் முதல் கூம்பூர் வரை செல்லும் சாலையில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியில் வாகனத் தணிக்கை பணிகளையும், மற்றும் வேடசந்துார் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு குழு அறையினையும் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு வைப்பறையினையும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது, திண்டுக்கல் தேர்தல் நடத்தும் அலுவலர் திரு.கோ.பழனிவேல், வேடசந்தூர் தேர்தல் நடத்தும் அலுவலர் திரு.வி.பிரபாகரன், திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் திரு.செந்தில்முருகன், திண்டுக்கல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் திரு.சுல்தான் சிக்கந்தர், வேடசந்தூர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் திரு.ராஜேந்திரன் ஆகியோர் உட்பட தேர்தல் அலுவலர்கள் பலர் உள்ளனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.