ஊதியத்துடன் கூடிய விடுப்பு: 135B பிரிவு கீழ் தொழிலாளர்களுக்கு தேர்தல் நாளில் 100% வாக்குப்பதிவு உறுதி செய்ய.
வெளியிடப்பட்ட தேதி : 03/04/2026
திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும், கேரளா, அஸ்ஸாம் மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வாக்குரிமை உள்ள தினக்கூலி, தற்காலிக மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு, 09.04.2026 தேர்தல் நாளில் அவர்களது சொந்த தொகுதியில் சென்று வாக்களிக்க மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951, பிரிவு 135B–ன் கீழ் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட அனைத்து தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் வேலை வழங்குநர்கள் இதனை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.[PDF 51KB]