மாவட்ட தேர்தல் அலுவலர் வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்காளர் பட்டியல் மற்றும் தேர்தல் உபகரணங்கள் அனுப்பும் பணிகளை ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 11/04/2026
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 2,301 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்காளர் பட்டியல் மற்றும் தேவையான தேர்தல் உபகரணங்கள் அனுப்பி வைக்கப்படும் பணிகள் குறித்து இன்று (10.04.2026) மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். english
