திண்டுக்கல் மாவட்டத்தில் 350 ஏக்கரில் பசுந்தீவன உற்பத்தித் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
கால்நடைகளின் உற்பத்தித்திறனுக்கு தீவனம் மற்றும் பசுந்தீவனம் மிகவும் இன்றியமையாத காரணிகள் ஆகும். பால் உற்பத்தியைப் பெருக்குவதற்கும், கறவை மாடுகளுக்கு தேவையான அளவு பசுந்தீவனம் வழங்குவது மிகவும் இன்றியமையாதது. கால்நடைகளுக்கான மொத்த உற்பத்தி செலவினத்தில் 65-70 விழுக்காடு, தீவனத்திற்காகவே செலவாகிறது. தீவன தேவை மற்றும் பசுந்தீவன உற்பத்திக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி உள்ளது. ஆகவே, தீவனப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையிலும், கால்நடை வளர்ப்போர் பசுந்தீவனத்தை உற்பத்தி செய்வதை ஊக்கப்படுத்தும் வகையிலும் தமிழக அரசு மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் நோக்குடன் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் நடப்பு நிதியாண்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு மானியத்துடன் கூடிய நீண்ட காலம் பலன் தரும் பசுந்தீவன உற்பத்தியை பெருக்குதல் திட்டம் 350 ஏக்கரில் செயல்படுத்தப்படவுள்ளது.. [PDF 68KB]