மூடு

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்-மகளிர் திட்டம்

மாவட்ட இயக்க மேலாண்மை அலகு

திண்டுக்கல் மாவட்டம்

தமிழ்நாடு அரசு 2012-13 ஆண்டு முதல் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் என்ற சிறப்பு திட்டத்தினை செயல்படுத்தி வருகின்றது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், ஊரக ஏழை மக்களுக்கான வலுவான, உயிரோட்டத்துடன் கூடிய அமைப்புகளை உருவாக்கி, நிதி சார்ந்த மற்றும் நிதி சாராத பல்வேறு சேவைகளையும் முறையாகப்பெற வழிவகை செய்து, ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உயா்த்தி குடும்ப வருமானத்தைப் பெருக்குவதும், இலக்கு மக்களை ஒருங்கிணைத்து சமுதாயம் சார்ந்த அமைப்புகளை உருவாக்கி அதன் மூலம் நீடித்த நிலைத்த வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்கித்தருவதும் ஆகும். இத்திட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 306 கிராம ஊராட்சிகளில் செயல்பட்டுவருகிறது.

மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும் …..[PDF 1 MB]