அக்டோபர் 25, 26 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை.

வெளியிடப்பட்ட தேதி : 26/10/2026

இந்திய வானிலை ஆய்வுத்துறையின் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையமானது தமிழ்நாட்டிற்கான அடுத்த 7 நாட்களுக்கான முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகின்ற 25.10.2026 மற்றும் 26.10.2026 ஆகிய இரண்டு நாட்களுக்கு அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு நாட்களில் திண்டுக்கல் மாவட்டத்தில், குறிப்பாக கொடைக்கானல் மலைக்கிராமங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், இதனால் நிலச்சரிவு, மண்சரிவு போன்ற இயற்கை இடர்பாடுகள் ஏற்படக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. [PDF 57KB]