ஒப்பந்தப்புள்ளிகள் திண்டுக்கல் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அவர்களால் வரவேற்கப்படுகின்றன.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள துறைக்குளங்களான மாவூர் அணை, சிறுவன்குளம், நீலமலைக்கோட்டை, தாமரைக்குளம் நரசிங்கபுரம், ரெங்கசமுத்திரக்குளம், புல்வெட்டிக்குளம் மற்றும் அத்திக்குளம் ஆகிய 7 கண்மாய்கள் மற்றும் மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமை குளங்களான காட்டுப்பெரியகுளம், பனங்குடி கண்மாய், ஊமச்சிகுளம், ஊமைசேர்வார்குளம், பங்காருசமுத்திரம் குளம் மற்றும் பாறைச்சின்னக்குளம் ஆகிய 6 கண்மாய்கள் மற்றும் குறுகிய கால பாசனக்குளங்களான பாப்பாக்குளம், ஆயக்குடி மற்றும் சிறுநாயக்கன்குளம் ஆகிய 2 குளங்கள் ஆகமொத்தம் 15 குளங்களுக்கும் மீன்பிடி உரிமையினை 3 ஆண்டு காலத்திற்கு குத்தகைக்கு விட மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள் திண்டுக்கல் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அவர்களால் வரவேற்கப்படுகின்றன. ஒப்பந்தப்புள்ளி ஆவணங்கள் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.tntenders.gov.in என்னும் இணையதள முகவரியினை காணலாம். [PDF 52KB]