ஜீவன் ஈமு கேர் இந்தியா (பி) லிட். நிறுவனத்திற்குச் சொந்தமான நிலம் 15.10.2026 அன்று பொது ஏலம்,
வெளியிடப்பட்ட தேதி : 03/10/2026
திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் நகரில் செயல்பட்டு வந்த ஜீவன் ஈமு கேர் இந்தியா (பி) லிட் என்ற நிதி நிறுவனத்திற்குச் சொந்தமான, திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துார் வட்டத்தில் உள்ள பின்வரும் நிலம், தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்புச் சட்டம் 1997-ன் கீழ் தகுதி பெற்ற அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர், திண்டுக்கல், அவர்களால் 15.10.2026 அன்று முற்பகல் 11.00 மணியளவில் வேடசந்துார் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது. [PDF 127KB]