மூடு

தடை செய்யப்பட்ட மற்றும் பூஜ்ஜிய மதிப்பீடு செய்யப்பட்ட நிலப் பதிவுகளை சரிபார்க்க சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் நியமனம்.

வெளியிடப்பட்ட தேதி : 16/09/2026

அரசாணை(நிலை) எண்.119, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை SS-1(2) துறை, நாள்:02.02.2026-ன்படி, வருவாய் ஆவணங்கள் கணினி மயமாக்கலின்போது தடை செய்யப்பட்ட (Blocked**)** நிலங்கள் மற்றும் பத்திரப் பதிவுத்துறையினரால் பூஜ்ஜியம் (Zero) என மதிப்பீடு வழங்கப்பட்ட நிலங்கள் பத்திரப் பதிவு செய்ய இயலாத சூழல் நிலவுகிறது. எனவே இந்த பதிவுகளை சரிபார்க்க திருச்சிராப்பள்ளியை தலைமையிடமாக கொண்டு சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (பதிவுகள் சரிபார்ப்பு) அரசால் பணியமர்த்தப்பட்டுள்ளார். இவர் திருச்சிராப்பள்ளி, கரூர், திண்டுக்கல் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் தடையினங்கள் மீது நடவடிக்கை எடுப்பார். [PDF 60KB]