முதலமைச்சர் காணொலிக் காட்சி வாயிலாக கூடுதல் மருத்துவமனை கட்டடங்களை திறந்து வைத்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 14/07/2026
திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், காணொலிக் காட்சி வாயிலாக, நிலக்கோட்டை, பட்டிவீரன்பட்டி, வத்தலக்குண்டு ஆகிய 3 அரசு மருத்துவமனைகளின் வளாகத்தில் மொத்தம் ரூ.9.10 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டடங்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கென திறந்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, நிலக்கோட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள கூடுதல் கட்டடத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.துர்காமூர்த்தி அவர்கள், குத்துவிளக்கு ஏற்றி வைத்து சிறப்பித்தார். [PDF 69KB]

