மூடு

பிற்படுத்தப்பட்டோர் நலம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை

செயல்பாடுகள்

  1. கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம்
  2. இலவச மிதிவண்டிகள் வழங்கும் திட்டம்
  3. இலவச சலவைப்பெட்டி வழங்குதல்
  4. இலவச தையல் இயந்திரங்கள் வழங்குதல்
  5. கடன் திட்டங்கள்
  6. நரிக்குறவர் நல வாரியம்
  7. முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம்
  8. உலமாக்கள் மற்றும் இதர பணியாளர்கள் நல வாரியம்
  9. உணவு மானியம் வழங்குதல்
  10. இலவச வீட்டுமனைப்பட்டா வழங்குதல்
  11. விடுதி மாணவ/மாணவியர்களுக்கான உணவு கட்டணம்
  12. சீருடை வழங்குதல்
  1. கல்வி உதவித்தொகை

    திட்டத்தின் பெயா் மற்றும் விபரம்தகுதிகள்

    அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை ஆங்கில வழி கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு படிப்புக்கட்டணம் வழங்கப்படுகிறது. மேலும், கல்வி நிலையங்கள் இணைந்துள்ள விடுதிகளில் தங்கி 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு கல்வி பயிலும் மாணவர்களுக்கு உண்டி, உறையுள் கட்டணம் வழங்கப்படுகிறது. பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு மற்றும் தொழில் நுட்ப படிப்புகள் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியர்களுக்கு இலவச கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவித்தொகைகள் வழங்கப்படுகிறது.
    1. பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவராக இருத்தல் வேண்டும்.
    2. ஆண்டு வருமானம் ரூ.200000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
    3. குடும்பத்தில் முதல் பட்டதாரி மாணவர்களுக்கு இலவச கல்வி திட்டத்தின் கீழ் அனைத்து திரும்ப செலுத்தப்படாத கட்டணங்கள் வழங்கப்படும்.
    அரசு, அரசு உதவிப்பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 1ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பயிலும் சிறுபான்மையின மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகைகள் வழங்கப்படுகிறது.. அ) சிறுபான்மையினத்தவராக இருக்க வேண்டும்.
    ஆ)

    1. பள்ளி படிப்பு – ஆண்டு வருமானம் – ரூ.100000/-க்கு மிகாமலும்,
    2. பள்ளி மேற்படிப்பு – ஆண்டு வருமானம் – ரூ.200000/-க்கு மிகாமலும்,
    3. முந்தைய ஆண்டில் இறுதித்தேர்வில் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

    பெண் கல்வி ஊக்குவிப்பு சிறப்பு திட்டம்

    கிராம புறங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் 3ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் பெண் பிள்ளைகளுக்கு ஊக்கத்தொகையாக ரூ.500/-ம் 6ம் வகுப்பு பயிலும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் பெண் பிள்ளைகளுக்கு ஊக்கத்தொகையாக ரூ.1000/-ம் வழங்கப்படுகிறது.

    பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூ.72000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
  2. இலவச மிதிவண்டிகள்

    அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 11ம் பயிலும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மாணவ, மாணவியர்களுக்கு எவ்வித நிபந்தனையுமின்றி இலவசமாக மிதிவண்டி வழங்கப்படுகிறது.

  3. இலவச சலவைப்பெட்டி வழங்குதல்

    பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் இனத்தை சேர்ந்த சலவை தொழில் செய்யும் நபர்களுக்கு சலவைப்பெட்டிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

    தகுதிகள்

    கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு ஆண்டு வருமானம் ரூ.60,000/-க்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.

  4. இலவச தையல் இயந்திரங்கள் வழங்குதல்

    பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் இனத்தை சேர்ந்த தையற்கலை தெரிந்த 20 வயது முதல் 45 வயது வரை உள்ள பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

    தகுதிகள்
    1. கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு ஆண்டு வருமானம் ரூ.40000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
    2. நகர்புறங்களில் வசிப்பவர்களுக்கு ஆண்டு வருமானம் ரூ.60000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
  5. கடன் திட்டங்கள்

    தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (TABCEDCO) சென்னை மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (TAMCO) சென்னை அலுவலகங்கள் மூலம் கீழ்காணும் கடன் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

    1. தனிநபர் கடன்
    2. சுய உதவிக்குழுக்களுக்கு சிறு வணிக கடன்
    3. நீர்பாசனக்கடன்
    தகுதிகள்
    1. பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் இனத்தவராக இருத்தல் வேண்டும்.
    2. கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு ஆண்டு வருமானம் ரூ.81,000/-க்கு மிகாமலும், நகர்புறங்களில் வசிப்பவர்களுக்கு ஆண்டு வருமானம் ரூ.1,03,000/-க்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.
    3. வயது வரம்பு 18 முதல் 60 வயது வரை இருக்க வேண்டும்.
  6. நரிக்குறவர் நல வாரியம்

    தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு அதிகபட்சமாக ரூ.7500/- முழு மானியமாக நல வாரியம் மூலம் வழங்கப்படுகிறது. குழுக்களாக சேர்ந்து தொழில் தொடங்குவதற்கு தனிநபர் மானியமாக ரூ.10000/- அல்லது குழுவிற்கு ரூ. 1,25,000/- அல்லது திட்ட மதிப்பில் 50 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது.

    இவ்வாரிய உறுப்பினர்களுக்கு கீழ்க்காணும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    • மாத ஓய்வூதியம் ரூ.1000/-
    • விபத்தினால் மரணம் ஏற்பட்டால் உதவித்தொகை ரூ.100000/-
    • இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை ரூ.15000/-
    • ஈமச்சடங்கு செலவிற்கான உதவித்தொகை ரூ.2000/-
    • திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, கருச்சிதைவு மற்றும் கண் கண்ணாடிக்கான உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
    • விபத்தினால் ஊனம் ஏற்பட்டால் ஊனத்தின் தன்மைக்கேற்ப ரூ.10000/- முதல் ரூ.100000/- வரை வழங்கப்பட்டு வருகிறது.
    • இவ்வாரிய உறுப்பினாகளின் குழந்தைகளுக்கு உயர்நிலை, மேல்நிலை மற்றும் உயர்கல்வி பயில்வோருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
  7. முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம்

    தமிழ்நாட்டில் வாழும் வயது முதிர்ந்த ஆதரவற்ற கணவரால் கைவிடப்பட்ட முஸ்லீம் மகளிர் நலனுக்காக மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் அனைத்து மாவட்டங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    • ஒவ்வொரு சங்கத்திற்கும் தலா ரூ.1 இலட்சம் விதை தொகை வழங்கப்பட்டுள்ளது,
    • சங்கங்களின் வளர்ச்சிக்காக சங்கத்தின் மூலம் திரட்டப்படும் நிதி ஆதாரத்திற்கேற்ப ஒரு சங்கத்திற்கு அதிகபட்சமாக ஆண்டிற்கு ரூ.20 இலட்சம் இணை மானியம் அரசால் வழங்கப்படுகிறது.
  8. உலமாக்கள் மற்றும் இதர பணியாளர்கள் நல வாரியம்

    இஸ்லாமியர்களின் பள்ளி வாசல்கள், மதரசாக்களில் பணிபுரியும் ஆலீம்கள், பேஷ், இமாம்கள், அரபி, ஆசிரியர்கள்/ஆசிரியைகள், மோதினார்கள், பிலால்கள், தர்க்காக்கள், ஆஷீர்கானாக்கள், அடக்கத் தலங்கள், தைக்காக்கள், முஸ்லீம் அனாதை இல்லங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் பணியாளர்களின் பொருளாதாரம் மற்றும் கல்வி நிலையங்களில் முன்னேற்றம் அடைவதற்காக உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் செயல்பட்டு வருகின்றது.

    இவ்வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் குடும்ப வாரிசுகளுக்கு கீழ்க்காணும் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    1. கல்வி உதவித்தொகை ரூ.1000/- to ரூ.6000/-
    2. திருமண உதவித்தொகை ரூ.2000/-
    3. கண் கண்ணாடி செலவு உதவித்தொகை ரூ.500/-
    4. மகப்பேறு உதவித்தொகை ரூ.6000/-
    5. மாத ஓய்வூதியம் ரூ.1000/-
    6. ஈமச்சடங்கு செலவிற்கான உதவித்தொகை ரூ.1000/-
    7. விபத்தினால் மரணம் ஏற்பட்டால் உதவித்தொகை ரூ.10000/- to ரூ.100000/-
    8. இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை ரூ.15000/-
  9. உணவு மானியம் வழங்குதல்

    அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியரால் நிர்வகிக்கப்படும் திருவள்ளுவர் அனாதை இல்லம் லிங்கத்தடிமேடு இல்லத்திற்கு ஓர் கல்வி ஆண்டில் மாணவர் ஒருவருக்கு மாதம் ஒன்றுக்கு உணவு மானியமாக ரூ.650/- வழங்கப்பட்டு வருகிறது.

  10. இலவச வீட்டுமனைப்பட்டா வழங்குதல்

    மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையின்கீழ் குழு ஏற்படுத்தப்பட்டு நில உரிமையாளர்களிடம் பேச்சு வார்த்தை மூலம் நிலகையகப்படுத்தும் திட்டம் மேற்கொள்ளப்பட்டு, மிகப்பிற்படுத்தப்பட்டோர் இனத்தை சார்ந்த நரிக்குறவர், ஒட்டர், வண்ணார் மற்றும் நாவிதர் ஆகியவர்களுக்கு தகுதிகுட்பட்டு தலா 3 செண்ட் நிலம் வழங்கப்பட்டு வருகிறது.

  11. விடுதி மாணவ/மாணவியர்களுக்கான உணவு கட்டணம்

    விடுதி மாணவ/மாணவியர்களுக்கு நல்ல உணவளிக்கும் பொருட்டு கட்டணத்தொகையினை கல்லூரி விடுதி மாணவ/மாணவியர்களுக்கு ரூ.1000/- ஆகவும், பள்ளி விடுதி மாணவ/மாணவியர்களுக்கு ரூ.900/- ஆக உயர்த்தியும் மற்றும் நாள்தோறும் வழங்கப்படும் உணவுகளுக்கான உணவுப்பொருட்களும் அங்கீகரிக்கப்பட்டது.

    சிறப்பு உணவு கட்டணம்

    விடுதி மாணவ/மாணவியர்களுக்கு கீழ்க்கண்ட பண்டிகை நாட்களில்

    1. பொங்கல்
    2. குடியரசு தினம்
    3. தமிழ் வருடப்பிறப்பு
    4. சுதந்திர தினம்
    5. தீபாவளி

    சிறப்பு உணவு வழங்க நபர் ஒருவருக்கு கல்லூரி விடுதிக்கு ரூ.40/-ம் பள்ளி விடுதிக்கு ரூ.20/-ம் அனுமதிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

  12. சீருடை வழங்குதல்

    விடுதி மாணவ/மாணவியர்களுக்கு ஒவ்வொரு கல்வி ஆண்டிற்கும் மாணவ/மாணவியர்களுக்கு தலா நான்கு இணை சீருடை வழங்கப்பட்டு வருகிறது.

தொடர்பு முகவரி

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
திண்டுக்கல்.