மூடு

போக்குவரத்து

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிட் திண்டுக்கல் மண்டலம்

கழகத்தின் தோற்றமும் நோக்கமும்

மதுரையை தலைமையிடமாகக் கொண்டு 17.01.1972 முதல் நிறுவப்பட்ட பாண்டியன் போக்குவரத்து கழகம் பொது மக்களுக்கு முழுமையாக சேவை செய்திடவும் நிர்வாக அமைப்பு திறம்பட செயல்படவும் இரண்டாக பிரிக்கப்பட்டு திண்டுக்கல்லை தலைமையிடமாக கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் 01.04.1986 முதல் செயல்பட துவங்கியது இப்போக்குவரத்துக் கழகம் திண்டுக்கல் மாவட்டம் மற்றும் தேனி மாவட்டம் ஆகியவற்றை உள்ளடக்கி பேருந்துகளை இயக்கியது. தற்போது 06.01.2004 முதல் இப்போக்குவரத்துக் கழகம் த.அ.போ.கழகம் (மதுரை) லிட்., மதுரையுடம் இணைக்கப்பட்டு துணை மேலாளர்கள், உதவி மேலாளர்கள், உதவி பொறியாளர்கள், கண்காணிப்பாளர்கள், அலுவலகப் பணியாளர்கள், ஓட்டுநர்/நடத்துனர் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் ஆக மொத்தம் 5335 பேர் தற்போது பணிபுரிந்து வருகின்றனர்.

மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும் [PDF 33 KB]