பள்ளிக் கல்வித்துறை
திண்டுக்கல் வருவாய் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறையின்கீழ் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் சேவைகள் முதன்மைக் கல்வி அலுவலரின் தலைமையின்கீழ் வழங்கப்பட்டு வருகிறது. கல்விச்சேவை, நிர்வாக உதவிகள், அரசின் நலத்திட்டங்கள் ஆகியவை வழங்கப்படுகிறது. அரசின் 14 வகையான நலத்திட்டங்கள் வளர்ச்சி திட்டங்கள், சேர்க்கை, பயிற்சி, இடைநின்ற மாணவர்கள் மறு-சேர்க்கை முதலியவற்றை ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையில் APO (உதவி திட்ட அலுவலர்) SSA மற்றும் ஒன்பதாம், பத்தாம் வகுப்புகளுக்கு ADPC (மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர்) RMSA ஆகியோர் செயல்படுத்துகின்றனர். இவர்களுடன் 04 மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் 32 வட்டாரக் கல்வி அலுவலர்கள் இக்கல்வி மாவட்ட நிர்வாக முன்னேற்றத்தில் முக்கிய பங்காற்றுகின்றனர்.