மூடு

643 நியாயவிலைக் கடைகளுக்கு 4ஜி இணையதள வசதியுடன் குடும்ப அட்டைதாரரின் கைவிரல்ரேகை பதிவு செய்யும் வசதியுடன் அல்லது கண் கருவிழியினை ஸ்கேன் செய்வதன் மூலமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் பெறும் புதிய வசதியுடன் கூடிய விற்பனை முனைய இயந்திரங்கள் வழங்கப்பட்டு, நியாயவிலைக் கடை விற்பனையாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

வெளியிடப்பட்ட தேதி : 28/05/2024
.

செ.வெ.எண்:-17/2024

நாள்: 14.05.2024

திண்டுக்கல் மாவட்டம்

643 நியாயவிலைக் கடைகளுக்கு 4ஜி இணையதள வசதியுடன் குடும்ப அட்டைதாரரின் கைவிரல்ரேகை பதிவு செய்யும் வசதியுடன் அல்லது கண் கருவிழியினை ஸ்கேன் செய்வதன் மூலமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் பெறும் புதிய வசதியுடன் கூடிய விற்பனை முனைய இயந்திரங்கள் வழங்கப்பட்டு, நியாயவிலைக் கடை விற்பனையாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 763 முழுநேர நியாயவிலைக்கடைகள், 272 பகுதிநேர நியாயவிலைக்கடைகள் என மொத்தம் 1035 நியாயவிலைக்கடைகள் வாயிலாக 6,88,720 குடும்ப அட்டைதாரர்களுக்கு குடிமைப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

பொது விநியோகத்திட்டம், நியாய விலைக்கடைகளில் உள்ள விற்பனை முனைய இயந்திரங்கள் மூலமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு பயோமெட்ரிக் முறையில் கைரேகை பதிவு செய்து அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது. இவ்வாறு வழங்கும்பொழுது குடும்ப அட்டைதாரர்களின் கைவிரல் ரேகை பதிவு செய்வதில் இணையதள இணைப்புகள் சரிவர கிடைக்காத நிலையில் குடும்ப அட்டைதாரர்கள் காத்திருக்க வேண்டிய நிலை சில நேரங்களில் ஏற்பட்டு வந்தது.

இதனை தவிர்க்கும்பொருட்டு கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 763 முழு நேர நியாயவிலைக் கடைகளில் 120 முழு நேர நியாயவிலைக் கடைகளுக்கு 4ஜி இணையதள வசதியுடன் குடும்ப அட்டைதாரரின் கைவிரல்ரேகை பதிவு செய்யும் வசதி அல்லது கண் கருவிழியினை ஸ்கேன் செய்வதன் மூலமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் பெறும் புதிய வசதியுடன் கூடிய விற்பனை முனைய இயந்திரம் வழங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இரண்டாம் கட்டமாக திண்டுக்கல் மாவட்டத்தில் எஞ்சிய 643 முழு நேர நியாயவிலைக் கடைகளில் திண்டுக்கல் மேற்கு வட்டத்தில் 99 நியாயவிலைக் கடைகளுக்கும், திண்டுக்கல் கிழக்கு வட்டத்தில் 102 நியாயவிலைக் கடைகளுக்கும், நத்தம் வட்டத்தில் 33 நியாயவிலைக் கடைகளுக்கும், கொடைக்கானல் வட்டத்தில் 44 நியாயவிலைக் கடைகளுக்கும், நிலக்கோட்டை வட்டத்தில் 88 நியாயவிலைக் கடைகளுக்கும், ஆத்தூர் வட்டத்தில் 19 நியாயவிலைக் கடைகளுக்கும், ஒட்டன்சத்திரம் வட்டத்தில் 64 நியாயவிலைக் கடைகளுக்கும், பழனி வட்டத்தில் 93 நியாயவிலைக் கடைகளுக்கும், வேடசந்தூர் வட்டத்தில் 63 நியாயவிலைக் கடைகளுக்கும், குஜிலியம்பாறை வட்டத்தில் 38 நியாயவிலைக் கடைகளுக்கும் ஆக மொத்தம் 643 நியாயவிலைக் கடைகளுக்கு 4ஜி இணையதள வசதியுடன் குடும்ப அட்டைதாரரின் கைவிரல்ரேகை பதிவு செய்யும் வசதியுடன் அல்லது கண் கருவிழியினை ஸ்கேன் செய்வதன் மூலமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் பெறும் புதிய வசதியுடன் கூடிய விற்பனை முனைய இயந்திரங்கள் இன்று(14.05.2024) நியாயவிலைக்கடை விற்பனையாளர்களிடம் வழங்கப்பட்டது.

இந்த புதிய இயந்திரத்தினை கையாளுவதற்கான பயிற்சி வகுப்பு திண்டுக்கல் கிழக்கு மற்றும் திண்டுக்கல் மேற்கு வட்டங்களில் உள்ள நியாயவிலைக் கடைகளின் விற்பனையாளர்களுக்கு திண்டுக்கல் நகரில் அமைந்துள்ள மத்திய கூட்டுறவு வங்கியிலும், நத்தம் வட்டத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளின் விற்பனையாளர்களுக்கு வட்டாட்சியர் அலுவலகத்திலும், கொடைக்கானல் வட்டத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளின் விற்பனையாளர்களுக்கு கொடைக்கானல் வட்டாட்சியர் அலுவலகத்திலும், ஒட்டன்சத்திரம் வட்டத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளின் விற்பனையாளர்களுக்கு ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்திலும், பழனி வட்டத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளின் விற்பனையாளர்களுக்கு பழனி வட்டாட்சியர் அலுவலகத்திலும், ஆத்தூர், நிலக்கோட்டை வட்டங்களிலுள்ள விற்பனையாளர்களுக்கான பயிற்சி நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்திலும், வேடசந்தூர் மற்றும் குஜிலியம்பாறை வட்டங்களிலுள்ள நியாயவிலைக்கடைகளின் விற்பனையாளர்களுக்கு வேடசந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்திலும் இன்று(14.05.2024) பயிற்சிகள் நடைபெற்றது. பகுதிநேர நியாயவிலைக்கடைகளுக்கும் புதிய வசதியுடன் கூடிய விற்பனை முனைய இயந்திரங்கள் விரைவில் வழங்கப்படவுள்ளன.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 763 முழு நேர நியாயவிலைக் டைகளிலும் இந்த புதிய விற்பனை முனைய இயந்திரத்தில் கைரேகை மற்றும் கண்ணின் கருவிழி மூலமாக பதிவுகள் பெறப்படும். கைரேகை விழா விட்டால் கருவிழி மூலமாக குடும்ப அட்டைதாரர்களின் விபரங்கள் பதிவு செய்யப்படும். மேலும், இந்த இயந்திரங்கள் 4ஜி வசதியுடன் அமைந்துள்ளது. இதில் கைரேகை வைத்து ரேசன் பொருட்கள் வாங்கும் பொழுதே பில்லிலும் பதிவிறக்கம் செய்யப்படும். இதனால் நியாயவிலைக் கடைகளில் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படாது, என மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அலுவலர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் தெரிவித்தனர்.

திண்டுக்கல்லில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமில் கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் திரு.கோ.காந்திநாதன், மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி ஜெயசித்ரகலா, துணைப்பதிவாளர்(பொது விநியோகத்திட்டம்) திரு.அன்புக்கரசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திண்டுக்கல்.