மூடு

திண்டுக்கல் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில்(மகளிர்) மகளிருக்கான தொழிற்பிரிவுகளில் மாநில கலந்தாய்வு மூலம் சேர விரும்புவோர் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட தேதி : 28/05/2024

செ.வெ.எண்:-18/2024

நாள்: 15.05.2024

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில்(மகளிர்) மகளிருக்கான தொழிற்பிரிவுகளில் மாநில கலந்தாய்வு மூலம் சேர விரும்புவோர் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில்(மகளிர்) கீழ்க்கண்ட மகளிர்க்கான தொழிற்பிரிவுகளில் மாநில கலந்தாய்வு மூலம் சேர்க்கை நடைபெற உள்ளது. ஐ.டிஐ-ல் சேர விரும்புவோர் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் 07.06.2024-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தொழிற்பிரிவுகள், கல்வித்தகுதி மற்றும் பயிற்சி காலம் விவரம் வருமாறு:-

1. கணினி இயக்குபவர் மற்றும் திட்டமிடுதல் உதவியாளர் (Computer Operator and Programming Assistant) – 10-ஆம் வகுப்பு தேர்ச்சி – 1 ஆண்டு

2. டெஸ்க்டாப் பப்ளிசிங் ஆப்பரேட்டர் (Desk Top Publishing Operator) – 10ஆம் வகுப்பு தேர்ச்சி – 1 ஆண்டு

3. நவீன ஆடை வடிவமைப்பு தொழில்நுட்பம் (Fashion Design and Technology)- 10ஆம் வகுப்பு தேர்ச்சி – 1 ஆண்டு

4. தகவல் தொடர்பு தொழில் நுட்பம் மற்றும் சாதனங்கள் பராமரிப்பு (Information and Communication Technology and System Maintancence) – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி – 2 ஆண்டுகள்

5. தையல் வேலை தொழில் நுட்பம் (Sewing Technology) – 8 அல்லது 1 0 ஆம் வகுப்பு தேர்ச்சி – 1 ஆண்டு

6. அலங்கார பூத்தையல் தொழில்நுட்பம் (Surface Ornamentation Technique (Embriodery)) – 8 அல்லது 10ஆம் வகுப்பு தேர்ச்சி – 1 ஆண்டு

7. திறன் மின்னனுவியல் தொழில்நுட்பப் பணியாளர்(Technician Power Electronic Systems) – 10ஆம் வகுப்பு தேர்ச்சி – 2 ஆண்டுகள்

சிறப்பம்சங்கள்:

• மாதந்தோறும் உதவித்தொகை ரூ. 750

• புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் பயின்ற மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000/-

• மகளிருக்கு உச்சகட்ட வயது வரம்பு இல்லை

• இலவச தங்கும் விடுதி மற்றும் உணவு வசதி உண்டு

• விலையில்லா மிதிவண்டி மற்றும் வரைபடக் கருவிகள்

• இலவச பயண அட்டை

• மத்திய அரசின் NCVT சான்றிதழ்

• விலையில்லா சீருடை மற்றும் தையற்கூலி ஆண்டு தோறும்

• விலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் காலணிகள்

• மொழித்திறன் மற்றும் கணினி பயிற்சி

மேலும் விபரங்களுக்கு திண்டுக்கல் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்(மகளிர்), முதல்வரை நேரிலோ அல்லது தொலைபேசி எண் 0451-2470504 வாயிலாகவோ தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திண்டுக்கல்.