மூடு

பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024-ஐ முன்னிட்டு, திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுத்தப்படவுள்ள பணியாளர்களை கணினி வாயிலாக ஒதுக்கீடு செய்யும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட தேதி : 28/05/2024
.

செ.வெ.எண்:-23/2024

நாள்:-20.05.2024

திண்டுக்கல் மாவட்டம்

பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024-ஐ முன்னிட்டு, திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுத்தப்படவுள்ள பணியாளர்களை கணினி வாயிலாக ஒதுக்கீடு செய்யும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024-ஐ முன்னிட்டு, திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுத்தப்படவுள்ள பணியாளர்களை கணினி வாயிலாக ஒதுக்கீடு செய்யும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(20.05.2024) நடைபெற்றது.

இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-

இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, பாராளுமன்ற தேர்தல்-2024-ஐ முன்னிட்டு திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு 19.04.2024 அன்று நடைபெற்றது. வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டுள்ள திண்டுக்கல் சில்வார்பட்டி கிராமம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, வாக்கு எண்ணிக்கை பணிக்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுத்தப்படவுள்ள பணியாளர்களை கணினி வாயிலாக ஒதுக்கீடு செய்யும் பணி இன்று(20.05.2024) மேற்கொள்ளப்பட்டது.

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்கு எண்ணிக்கை பணிக்காக பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்துார், நிலக்கோட்டை, நத்தம், திண்டுக்கல் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு தலா 14 மேஜைகள் என மொத்தம் 84 மேஜைகள் அமைக்கப்படவுள்ளன. வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுத்த 20 சதவீதம் கூடுதல் பணியாளர்களுடன் நுண்பார்வையாளர்கள் 102, கண்காணிப்பாளர்கள் 102, உதவியாளர்கள் 102, அலுவலக உதவியாளர்கள் 102 என மொத்தம் 408 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு 22.05.2024 அன்று முதற்கட்ட பயிற்சி நடைபெறவுள்ளது, என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சே.ஹா.சேக் முகையதீன் உட்பட அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.