மூடு

பழங்குடியினர் மாணாக்கர்கள் 2024-2025-ஆம் ஆண்டிற்கான முதுநிலை பி.எச்.டி.(Ph.D) மற்றும் முனைவர் ஆராய்ச்சி உயர் படிப்பைத் வெளிநாடுகளில் தொடர தேர்ந்தெடுக்கப்படும் மாணாக்கர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட தேதி : 28/05/2024

செ.வெ.எண்:-25/2024

நாள்:-21.05.2024

திண்டுக்கல் மாவட்டம்

பழங்குடியினர் மாணாக்கர்கள் 2024-2025-ஆம் ஆண்டிற்கான முதுநிலை பி.எச்.டி.(Ph.D) மற்றும் முனைவர் ஆராய்ச்சி உயர் படிப்பைத் வெளிநாடுகளில் தொடர தேர்ந்தெடுக்கப்படும் மாணாக்கர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும், சுயநிதிக் கல்லூரிகளில் பயிலும் பழங்குடியினர் மாணாக்கர்கள் 2024-2025-ஆம் ஆண்டிற்கான முதுநிலை பி.எச்.டி.(Ph.D) மற்றும் முனைவர் ஆராய்ச்சி உயர் படிப்பைத் (National Overseas Scholarship Scheme (NOS)) வெளிநாடுகளில் தொடர தேர்ந்தெடுக்கப்படும் மாணாக்கர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

ஆர்வமுள்ள மாணாக்கர்கள் https://overseas.tribal.gov.in என்ற இணையவழியில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் 31.05.2024 ஆகும். மேலும் விவரங்களுக்கு இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.

திண்டுக்கல் மாவட்டத்தில் தகுதியுள்ள மாணாக்கர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.