மூடு

அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திட மாநில கலந்தாய்வு மூலம் நடைபெறும் மாணவர்கள் சேர்க்கைக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க 13.06.2024 வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட தேதி : 13/06/2024

செ.வெ.எண்:-05/2024

நாள்: 08.06.2024

திண்டுக்கல் மாவட்டம்

அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திட மாநில கலந்தாய்வு மூலம் நடைபெறும் மாணவர்கள் சேர்க்கைக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க 13.06.2024 வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

2024-ஆம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரவும், அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திடவும் மாநில கலந்தாய்வு மூலம் நடைபெறும் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பங்களை இணையதளம் (www.skilltraining.tn.gov.in) வாயிலாக பதிவு செய்ய வேண்டும். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க மாணவர்களுக்கு உதவிடும் வகையில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டி மையங்கள் ஆகியவற்றில் உதவி மையங்கள் (Help Desk) அமைக்கப்பட்டுள்ளன. இம்மையங்களின் பட்டியல் மேற்குறித்த இணைதள முகவரியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பயிற்சியில் சேர எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டண தொகையான ரூ. 50 விண்ணப்பதாரர் Debit Card / Credit Card / Net Banking / G-Pay வாயிலாக செலுத்தலாம். இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய துவங்கப்பட்ட நாள் 10.05.2024, இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய கால நீட்டிப்பு செய்து வழங்கப்பட்ட கடைசி நாள் 13.06.2024 ஆகும். மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் இணையதள கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் மற்றும் கலந்தாய்வு குறித்த விவரங்கள் கடைசி தேதிக்கு பிறகு இதே இணையதளத்தில் வெளியிடப்படும்.

மேலும், இத்தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கைக்காக விண்ணப்பத்தினை பூர்த்தி செய்வதில் ஏதேனும் சந்தேகம் ஏற்படின், திண்டுக்கல்(குள்ளனம்பட்டி) நத்தம் மெயின் ரோட்டில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் அவர்களை அணுகி பயன்பெறலாம். மேலும் விபரங்களுக்கு தொலைபேசி எண்கள்: 0451 – 247 1411, 0451 – 2471412 அலைபேசி எண்கள்: 9789789927, 9499055762 வாயிலாகவும் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திண்டுக்கல்.