மூடு

அரசு தானியங்கிப் பணிமனையில் காலியாக உள்ள 4 கம்மியர் (மோட்டார் வாகனம்) தொழிற்பழகுநர்(APPRENTICE) பயிற்சியிடங்களை நிரப்புவதற்கான நேர்முகத்தேர்வு 14.06.2024 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட தேதி : 14/06/2024

செ.வெ.எண்:-18/2024

நாள்:-10.06.2024

திண்டுக்கல் மாவட்டம்

அரசு தானியங்கிப் பணிமனையில் காலியாக உள்ள 4 கம்மியர் (மோட்டார் வாகனம்) தொழிற்பழகுநர்(APPRENTICE) பயிற்சியிடங்களை நிரப்புவதற்கான நேர்முகத்தேர்வு 14.06.2024 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் சரளப்பட்டி பிரிவு, அரசு தானியங்கிப் பணிமனையில் காலியாக உள்ள கம்மியர் (மோட்டார் வாகனம்) தொழிற்பழகுநர்(APPRENTICE) பயிற்சியிடங்கள் நான்கினை நிரப்புவதற்கு நேர்முகத்தேர்வு அரசு தானியங்கிப் பணிமனையில் 14.06.2024 அன்று காலை 10.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று ஐ.டி.ஐ.யில் கம்மியர் (மோட்டார் வாகனம்) பிரிவில் இரண்டு வருட பயிற்சியில் (N.T.C) தேர்ச்சி பெற்று 18 வயது நிறைவு செய்த, இதுவரை தொழிற்பழகுநர் பயிற்சி பெறாத நபர்கள் தங்களது அசல் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் தொழில்நுட்ப கல்விச் சான்றிதழ்கள் அவற்றின் ஒளிநகல்கள் (Xerox Copies) மற்றும் தங்களது சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும், இந்நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு பயணப்படி எதுவும் வழங்கப்பட மாட்டாது, என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.