மூடு

“பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் 2025“ விருதுக்கு இணையதளம் வாயிலாக 31.07.2024-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட தேதி : 14/06/2024

செ.வெ.எண்:-21/2024

நாள்:-12.06.2024

திண்டுக்கல் மாவட்டம்

“பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் 2025“ விருதுக்கு இணையதளம் வாயிலாக 31.07.2024-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

இந்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம், “பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் (PMRBP) 2025“ (பால் புரஷ்கார் விருது) அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விருது 5 வயது முதல் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு, வீர, தீர மற்றும் தன்னலமற்ற செயல்கள் மற்றும் விளையாட்டு, சமூக சேவை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், கலை மற்றும் பண்பாடு, புதுமைகள் செய்தல் ஆகிய துறைகளில் சமூகத்தில் சிறந்த வெளிப்படையான தாக்கத்தை ஏற்படுத்திய குழந்தைகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்கும் வகையில், ஆண்டுதோறும் டிசம்பர்- 26 ”வீர்பால்திவாஸ்” என்ற நாளினை சிறப்பிக்கும் விதமாக பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் மாண்புமிகு குடியரசு தலைவர் அவர்களால் வழங்கப்பட்டு வருகிறது.

மேற்குறிப்பிட்ட துறைகளில் கடந்த இரண்டு ஆண்டுகளில் சிறந்த சாதனை படைத்த குழந்தைகளுக்கான விண்ணப்பங்கள் குழந்தைகள் அல்லது குழந்தைகள் சார்ந்த நபர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. இவ்விருது மற்றும் வழிகாட்டுதல் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் வலைதளத்தில் https://wcd.nic.in/ அறிந்து கொள்ளலாம்.

இவ்விருதினை பெற இந்திய குடிமகனாக, இந்தியாவில் வசிப்பவராகவும், 5 வயதிற்கு மேல் 18 வயதிற்கு (அந்தந்த ஆண்டு ஜூலை 31 அன்று) உட்பட்டவராகவும், கடந்த இரண்டு ஆண்டுகளில் மேற்குறிப்பிட்ட துறைகளில் சிறந்து விளங்கியவர்கள் மத்திய அரசின் https://awards.gov.in என்ற இணையதளத்தில் வரும் 31.07.2024-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.