மூடு

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் 21.06.2024 அன்று நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட தேதி : 19/06/2024

செ.வெ.எண்:-30/2024

நாள்:-15.06.2024

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் 21.06.2024 அன்று நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

தமிழக அரசு, திருநங்கைகள் நலன் கருதி திருநங்கைகள் நலவாரியத்தின் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நலவாரியத்தின் மூலம் திருநங்கைகளுக்கு அடையாள அட்டை, குடும்ப அட்டை, சுயதொழில் துவங்க மானியத் தொகை வழங்குதல், சுய உதவிக்குழு பயிற்சி மற்றும் மானியத் தொகை, காப்பீட்டுத் திட்ட அட்டை, இலவச தையல் இயந்திரங்கள் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நலத்திட்டங்கள் அனைத்தும் திருநங்கைகள் பெற்று பயனடைய சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் வழிகாட்டுதலின்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் சமூக நலத்துறையின் மூலம் திருநங்கைகளின் விவரங்களை பதிவு செய்து அடையாள அட்டை வழங்குதல், ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை, ஆயுஷ்மான் பாரத் அட்டை ஆகியவற்றினை வழங்கிட ஏதுவாக சம்பந்தப்பட்ட துறைகள் ஒருங்கிணைந்து சிறப்பு முகாம் 21.06.2024 அன்று காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது.

எனவே, திருநங்கைகள் இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.