மூடு

புற உலக சிந்தனையற்ற பயிற்சி மையம் செயல்படுத்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட தேதி : 24/06/2024

செ.வெ.எண்:-42/2024

நாள்:-20.06.2024

திண்டுக்கல் மாவட்டம்

புற உலக சிந்தனையற்ற பயிற்சி மையம் செயல்படுத்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 2024-2025-ஆம் நிதி ஆண்டிற்கு புற உலக சிந்தனையற்ற ஆரம்ப கால பயிற்சி மையம் (0-6 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள்) நடத்த விருப்பமுள்ள, மாற்றுத்திறனாளிகள் நலச்சட்டம் 2016-ல் பதிவு செய்யப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இத்திட்டத்தினை 0-6 வயதுடைய, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் மாற்றுத்திறனாளி தேசிய அடையாள அட்டை பெற்ற மாற்றுத்திறனாளி குழந்தைகள் விவரங்கள், சிறப்பு கல்வி பயின்ற சிறப்பாசிரியர்கள் ((MR OR AUTISM SPECIAL B.ED.,) மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப இடவசதியுடன் விருப்பமுள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் 26.06.2024-ஆம் தேதிக்குள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களை, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக தொலைபேசி எண் 0451-2460099 வாயிலாக சம்பந்தப்பட்ட அலுவலர்களை தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.