மூடு

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட தேதி : 03/07/2024
.

செ.வெ.எண்:64/2024

நாள்: 28.06.2024

திண்டுக்கல் மாவட்டம்

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(28.06.2024) நடைபெற்றது.v

இக்கூட்டத்தில், விவசாயம் தொடர்பான பொதுவான கோரிக்கைகளை விவசாயிகள் மற்றும் விவசாய சங்க தலைவர்கள், பட்டா கோரி விண்ணப்பம் அளிக்கும் மனுக்களுக்கு விரைந்து தீர்வு வழங்க வேண்டும். இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மின் இணைப்பு கோரி பெறப்படும் விண்ணப்பங்களுக்கு மின் இணைப்பு வழங்கிட வேண்டும். நாற்றுக்கள் வனத்துறையின் சார்பில் வழங்குவதனை உறுதிப்படுத்திட வேண்டும். மா சாகுபடியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான நிவாரண உதவிகளை விரைந்து வழங்க வேண்டும். ஆக்கிரமிப்பு குறித்து வழங்கப்படும் மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும். சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் கழிவுநீர் கலக்காத வகையில் நீர் வழி ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும். சிப்காட் தொழில்பேட்டையினை பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிந்து செயல்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் மனுக்கள் அளித்தனர்.

மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்று, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

தமிழகத்தில் விவசாயத்தை மேம்படுத்துவதற்காகவும், விவசாயிகளின் நலனுக்காகவும் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், 1000 ஏக்கருக்கு நெல் நுண்ணுாட்ட உரம் விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய 5000 கிலோ பொருள் இலக்கும், ரூ.1.40 இலட்சம் நிதி இலக்கும், 9000 ஏக்கருக்கு சிறுதானியம் நுண்ணுாட்ட உரம் விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய 45,000 கிலோ பொருள் இலக்கும், ரூ.22.95 இலட்சம் நிதி இலக்கும் பெறப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் 30,000 ஏக்கருக்கு திரவ உயிர் உரம் விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய 15,000 லிட்டர் பொருள் இலக்கும், ரூ.22.50 இலட்சம் நிதி இலக்கும், 2024-25-ஆம் ஆண்டு ஆடாதொடா, நொச்சி நடவுப் பொருட்கள் வழங்கி விவசாயிகளை ஊக்குவிக்கும் பொருட்டு 1.70 இலட்சம் செடிகளை தரிசு நிலங்களிலும், வயல் வரப்புகளிலும் நடவு செய்யவும், 2024-25-ஆம் ஆண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட கிராம ஊராட்சிகளில் 8,500 விவசாயிகளின் நிலத்தில் மண் பரிசோதனை செய்து மண் வள அட்டை வழங்கிட ரூ.25.50 இலட்சம், 2024-25-ஆம் ஆண்டு அமில நிலங்களை சீர்படுத்தி பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்க 2800 ஏக்கருக்கு ரூ.112.00 இலட்சம், ஒருங்கிணைந்த பண்ணைய திட்டத்தில் 500 ஒருங்கிணைந்த பண்ணைய தொகுப்புகள் அமைத்திடவும், தரமான மரக்கன்றுகள் உற்பத்தி செய்திட ரூ.2.50 இலட்சம், 2500 ஏக்கருக்கு பசுந்தாள் உரம் விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய பொருள் மற்றும் ரூ.25.00 இலட்சம், விவசாயிகளுக்கு 660 மண்புழு உரப்படுக்கைகள் விநியோகம் செய்ய பொருள் இலக்கும், ரூ.18.00 இலட்சம், மானாவாரி நிலங்களில் உற்பத்தியை ஊக்குவிக்க 14,000 ஏக்கர் பொருள் மற்றும் ரூ.1.68 கோடி நிதி, என பல்வேறு இனங்களில் நிதி இலக்கு பெறப்பட்டுள்ளது.

வேளாண் காடுகள் திட்டத்தின் வாயிலாக வேப்பமரம் நடுதலை ஊக்குவிக்க 15,000 மரக்கன்றுகள் மற்றும் ரூ.3.00 இலட்சம், அங்கக வேளாண்மையை ஊக்குவிக்க வட்டார வாரியாக ஒரு கிராமத்தில் மாதிரி பண்ண உருவாக்க 14 பொருள் இலக்கும் ரூ.14.00 இலட்சம் நிதி இலக்கும் பெறப்பட்டுள்ளது. தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், நெற்பயிர் சாகுபடி பரப்பு மற்றும் உற்பத்தியை அதிகரிக்க ரூ.6.06 இலட்சம், பருத்தி பரப்பு மற்றும் உற்பத்தி அதிகரிக்க ரூ.2.60 இலட்சம், சிறுதானியங்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உழவு மானியம் வழங்க ரூ.7.00 இலட்சம், மக்காச்சோளம் சாகுபடி பரப்பு மற்றும் உற்பத்தியை அதிகரிக்க ரூ.2.48 கோடி என நிதி இலக்கு பெறப்பட்டுள்ளது.

உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தின் கீழ், பயிர்களின் சாகுபடி மற்றும் உற்பத்தியை அதிகரிக்க பயறு வகை பயிர்களுக்கு ரூ.75.32 இலட்சம், சோளம் மற்றும் கம்பு பயிர்களுக்கு ரூ.1.92 கோடி, மக்காச்சோளம் பயிருக்கு ரூ.21.85 இலட்சம், பருத்தி பயிருக்கு ரூ.1.80 இலட்சம் என நிதி இலக்கு பெறப்பட்டுள்ளது. தேசிய உணவு எண்ணெய் இயக்கத்தின் கீழ், பயிர் சாகுபடி பரப்பு மற்றும் உற்பத்தியை அதிகரிக்க, எண்ணெய் வித்து பயிர்களுக்கு ரூ.92.84 இலட்சம், மரஎண்ணெய் வித்து பயிர்களுக்கு ரூ.3.39 இலட்சம் நிதி இலக்கு பெறப்பட்டுள்ளது.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 2024-25-ஆம் ஆண்டில் 60 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு, கிராம மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் கீழ், தரிசு நில முட்புதர்களை அகற்றுதல், சாகுபடி நிலத்தின் வரப்புகளில் பயறு வகை விதைப்பை ஊக்குவித்தல், மண் வளத்தை மேம்படுத்துதல், விசைத்தெளிப்பான் விநியோகம் செய்தல் போன்ற பணிகளுக்கு மொத்தமாக 2024-25-ஆம் ஆண்டிற்கு ரூ.84.41 இலட்சம் நிதி இலக்கு பெறப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அட்மா திட்டத்திற்கு 2024-25-ஆம் ஆண்டில் ரூ.1.40 இலட்சம் நிதி இலக்கு பெறப்பட்டுள்ளது.

மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தில், நெற்பயிருக்கு மாற்றாக சிறு தானியங்கள், பயறு வகை, எண்ணெய் வித்து பயிர்கள் சாகுபடியை ஊக்குவிக்க 2450 ஏக்கர் பொருள் இலக்கும், ரூ.29.40 இலட்சம் நிதி இலக்கும் பெறப்பட்டுள்ளது. துவரை சாகுபடி பரப்பு விரிவாக்க இயக்கத்தில் 1400 ஏக்கர் பொருள் இலக்கும், ரூ.49.00 இலட்சம் நிதி இலக்கும், வேளாண் தரிசில் ஜிப்சம் இடுதலுக்கு 1000 ஏக்கர் பொருள் இலக்கும், ரூ.49.00 இலட்சம் நிதி இலக்கும், நெற்பயிரில் ஜிப்சம் இடுதலுக்கு 3000 ஏக்கர் பொருள் இலக்கும், ரூ.7.50 இலட்சம் நிதி இலக்கும், நெற்பயிரில் துத்தநாக சல்பேட் இடுதலுக்கு 2500 ஏக்கர் பொருள் இலக்கும், ரூ.6.25 இலட்சம் நிதி இலக்கும், பலன் தரும் பருத்தி சாகுபடியில் அடர் நடவு சாகுபடி முறை, பூச்சி நோய் மேலாண்மை, ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து, டிரோன் வாடகை ஆகிய இனங்களில் ரூ.32.00 இலட்சம் நிதி இலக்கு என பல்வேறு திட்டங்களை செயல்படுத்த நிதி இலக்கு பெறப்பட்டுள்ளது.

தமிழக அரசின் திட்டங்களை விவசாயிகள் அறிந்து, நல்ல முறையில் பயன்படுத்தி, வேளாண் தொழிலை மேம்படுத்தி, விவசாய பொருட்களை அதிகளவில் உற்பத்தி செய்து, தங்கள் வாழ்வாதாரங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு.கோ.காந்திநாதன், வேளாண்மை இணை இயக்குநர் திருமதி அனுசுயா, மாவட்ட ஆட்சியரின் நேர்முகஉதவியாளர்(வேளாண்மை) திரு.ராமராஜ், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் திருமதி காயத்ரி, முன்னோடி வங்கி மேலாளர் திரு.அருணாச்சலம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி) திரு.முருகன், செயற்பொறியாளர் (பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு) திரு.குமணன், உதவி திட்ட அலுவலர் திரு.அண்ணாதுரை, செயற்பொறியாளர் திருமதி கஸ்தூரிபாய், உதவி வன பாதுகாவலர் திருமதி நிர்மலா உட்பட துறை அலுவலர்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.