மூடு

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடைபெற்ற தேர்வில் 927 தேர்வர்கள் கலந்து கொண்டனர்.

வெளியிடப்பட்ட தேதி : 22/07/2024

செ.வெ.எண்:53/2024

நாள்: 21.07.2024

திண்டுக்கல் மாவட்டம்

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடைபெற்ற தேர்வில் 927 தேர்வர்கள் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி, எம்.எஸ்.பி சோலைநாடார் மேல்நிலைப்பள்ளி, புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடைபெற்ற தேர்வு இன்று(21.07.2024) நடைபெறுகிறது.

அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட 18 தேர்வு அறைகளில், 360 தேர்வர்களுக்கும், எம்.எஸ்.பி சோலைநாடார் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட 18 தேர்வு அறைகளில் 360 தேர்வர்களுக்கும், புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட 13 தேர்வு அறைகளில் 244 தேர்வர்களுக்கும் என மெத்தம் 49 தேர்வு அறைகளில் 964 தேர்வர்களுக்கு தேர்வு எழுத அழைப்பாணை அனுப்பப்பட்டது

அதில், புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தேர்வில் 345 நபர்கள் தேர்வு எழுதினார்கள். 15 நபர்கள் தேர்வு எழுதவில்லை. எம்.எஸ்.பி சோலைநாடார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தேர்வில் 345 நபர்கள் தேர்வு எழுதினார்கள், 15 நபர்கள் தேர்வு எழுதவில்லை. புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தேர்வில் 237 நபர்கள் தேர்வு எழுதினார்கள், 7 நபர்கள் தேர்வு எழுதவில்லை. திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 49 தேர்வு அறைகளில் நடைபெற்ற தேர்வில் 927 நபர்கள் தேர்வு எழுதினார்கள். 37 நபர்கள் தேர்வு எழுதவில்லை. இத்தேர்வினை 96 சதவீத நபர்கள் தேர்வு எழுதினார்கள்

தேர்வு மையங்களை கண்காணிக்க நடமாடும் குழுக்கள், பறக்கும் படை, வீடியோ ஒளிப்பதிவாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தேர்வு மையங்களில் தேர்வர்கள் எவ்வித சிரமமின்றி தேர்வு எழுதுவதற்கு தேவையான குடிநீர், கழிப்பறை, காற்றோட்டமான இடவசதி, மின்வசதிகள், மின்விளக்குகள் ஆகிய அடிபடை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டியிருந்தன.

இத்தேர்வு மையத்தினை இணை இயக்குநர் (ஆசிரியர் தேர்வு வாரியம்) திருமதி K.ஸ்ரீதேவி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு.அ.நாசருதீன் ஆகியோர் பார்வையிட்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.