மூடு

வருமானவரி பிடித்தம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட தேதி : 30/07/2024
.

செ.வெ.எண்:-74/2024

நாள்: 27.07.2024

திண்டுக்கல் மாவட்டம்

வருமானவரி பிடித்தம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருமானவரி பிடித்தம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் மாவட்ட கருவூல அலுவலர் திருமதி விஜயநிர்மலா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு வரிப்பிடித்தம் செய்யும் அலுவலர்களின் நலன்கருதி தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட கருவூல அலுவலகங்களின்கீழ் வருகின்ற அனைவருக்கும் வருமான வரிப்பிடித்தம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் கருவூல அலுவலகத்தின் மூலம் வருமானம் பிடித்தம் செய்யப்பட்டு வருகின்ற தமிழ்நாடு அரசு ஊழியர்களின் நலன் கருதி வருமானம் பிடித்தம் செய்வது குறித்து அலுவலர்களுக்கு விளக்கும் வகையில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்த கருத்தரங்கில், முறையாக வரிப்பிடித்தம் பிடிப்பது எப்படி, வரிப்பிடித்தம் செய்பவர்களின் கடமைகள், அவர்களின் பொறுப்புகள், வரிப்பிடித்தம் விதிகளை முறையாக பின்பற்றவில்லையென்றால் வரும் சிக்கல்கள் குறித்து விளக்கி கூறப்பட்டது. இந்த விழிப்புணர்வு கருத்தரங்கில் பல்வேறு அரசு துறைகளை சார்ந்த 400-க்கும் மேற்ப்பட்ட அலுவலர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

இந்நிகழ்ச்சியில் வருமானவரி துணை ஆணையர் திரு.இ.மதுசூதன்,IRS அவர்கள், வருமானவரி அலுவலர் திரு.G.வெங்கடேஸ்வரன் அவர்கள், வருமானவரி ஆய்வாளர் திரு.P.கணேசன், உதவி கருவூல அலுவலர் திரு.பா.செல்வி மணிமேகலை ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.