மூடு

கேரளா மாநிலம், வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு, ரூ.4.00 இலட்சம் மதிப்பீட்டிலான நிவாரணப் பொருட்களை லாரியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள், அனுப்பி வைத்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 08/08/2024
.

செ.வெ.எண்:-14/2024

நாள்:-06.08.2024

திண்டுக்கல் மாவட்டம்

கேரளா மாநிலம், வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு, ரூ.4.00 இலட்சம் மதிப்பீட்டிலான நிவாரணப் பொருட்களை லாரியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள், அனுப்பி வைத்தார்.

கேரளா மாநிலம், வயநாடு மாவட்டத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு, இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில் 200 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் ரூ.4.00 இலட்சம் மதிப்பீட்டிலான நிவாரணப் பொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து இன்று(06.08.2024) லாரியில் அனுப்பி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-

கேரளா மாநிலம், வயநாடு மாவட்டத்தில் கடந்த வாரம் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்தனர். ஏராளமான பொதுமக்கள் தங்கள் உறவுகளையும், வீடு மற்றும் உடமைகளையும் இழந்து தவிக்கின்றனர். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கான அன்றாட அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

பேரிடரில் சிக்கி தவிக்கும் பொதுமக்களுக்கு உதவிடும் வகையில், அவர்களுக்கான அன்றாட தேவைகளை வழங்கும் வகையில், திண்டுக்கல் மாவட்ட இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில் சேலை, கைலி, பெட்சீட், துண்டு, நைட்டி, குழந்தைகள் ஆடை, நாப்கின், பேஸ்ட், பிரஸ், குளியல் சோப், சலவைசோப், மாஸ்க், தேங்காய் எண்ணெய், பால்பவுடர், அரிசி, பருப்பு, மளிகைப்பொருட்கள், உலர் பழங்கள், மெகுவர்த்தி, கொசுவர்த்தி என 200 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் ரூ.4.00 இலட்சம் மதிப்பீட்டிலான நிவாரணப் பொருட்கள் லாரியில் இன்று(06.08.2024) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.மு.கோட்டைக்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி) திரு.செ.முருகன், இந்தியன் ரெட்கிராஸ் சோசைட்டி அவைத்தலைவர் திரு.காஜாமுகைதீன், செயலாளர் திரு.சையதுஅபுதாகீர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.