மூடு

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர.சக்கரபாணி அவர்கள், “போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு“ என்பதனை ஏற்படுத்தும் வகையில் மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 13/08/2024
.

செ.வெ.எண்:-33/2024

நாள்:12.08.2024

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர.சக்கரபாணி அவர்கள், “போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு“ என்பதனை ஏற்படுத்தும் வகையில் மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.

அனைவரும் போதைப்பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியேற்றுக்கொண்டனர்.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் “போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு“ என்பதனை ஏற்படுத்தும் வகையில் மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை இன்று (12.08.2024) தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், “போதைப்பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாக மாட்டேன். மேலும், எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன். போதைப் பழக்கத்திற்குள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாகத் தருவேன். போதைப் பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்குத் துணை நிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கம் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமார உறுதி கூறுகிறேன்” என போதைப்பழக்கத்திற்கு எதிரான உறுதிமொயை வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

பேரணியில் கலந்துகொண்ட மாணவ, மாணவிகள், “ஒழிப்போம் ஒழிப்போம்! போதைப் பொருட்கள் பழக்கத்தை ஒழிப்போம், அழிப்போம் அழிப்போம்! போதைப் பொருட்கள் பழக்கத்தை அழிப்போம், அடிமையாகாதே அடிமையாகாதே! போதைப் பொருட்கள் பழக்கத்திற்கு அடிமையாகாதே, போதைப் பொருட்களற்ற வாழ்வே ! பொன்னான வாழ்வு, கள்ளச்சாராயம் அருந்தாதே! கண்ணை இழக்காதே, குடும்பத்தை நினை! போதைப் பொருட்களை மற, குடும்பம் முன்னேற ! போதைப் பொருட்களை மற, போதைப் பொருட்கள் பழக்கம் வேண்டாம் ! மரண பயமும் வேண்டாம், கள்ளச்சாராயம் குடிக்கும் வழி! மரணத்துக்குப் போகும் வழி, போதைப் பொருட்கள் ஆதிக்கத்தை அழிப்போம்! புதிய சமுதாயத்தை காப்போம், என வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச் சென்றனர்.

.

.

ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் தொடங்கிய விழிப்புணர்வு பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று கே.ஆர்.அரசு மேல்நிலைப்பள்ளியில் முடிவடைந்தது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.அ.பிரதீப், இ.கா.ப., பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.சௌ.சரவணன், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் திருமதி மு.அய்யம்மாள், ஒட்டன்சத்திரம் நகர்மன்ற தலைவர் திரு.க.திருமலைச்சாமி, ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் திருமதி காயத்ரிதேவி, நகர்மன்ற துணைத்தலைவர் திரு.ப.வெள்ளைச்சாமி, கல்லுாரி, மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.