மூடு

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க இணையதளத்தில் முன்பதிவு செய்ய 02.09.2024 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட தேதி : 28/08/2024

செ.வெ.எண்:-71/2024

நாள்:-26.08.2024

திண்டுக்கல் மாவட்டம்

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க இணையதளத்தில் முன்பதிவு செய்ய 02.09.2024 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்-2024, மாநிலம் முழுவதும் வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் மாவட்டம், மண்டல அளவில் மற்றும் மாநில அளவில் நடத்தப்படவுள்ளது.

அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகிய ஐந்து பிரிவுகளில் பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகள் ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில், மாவட்ட அளவில் 27 விளையாட்டுக்கள், 53 வகைகளில் மாவட்ட, மண்டலம் மற்றும் மாநில அளவில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

போட்டியில் கலந்துகொள்ள வயது வரம்பு, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 12 முதல் 19 வயது வரையிலும், கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கு 17 முதல் 25 வயது வரையிலும், மாறறுத்திறனாளிகள் வயது வரம்பின்றி அனைத்து வயது பிரிவினருக்கும், பொதுப்பிரிவினர் 15 முதல் 35 வயது வரையிலும், அரசு ஊழியர்கள் அந்தந்த மாவட்டத்தில் பணிபுரிபவர்கள் கலந்து கொள்ளலாம்.

விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் https://sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் CM Trophy 2024 – Online Registration- Player Login – இல் முன்பதிவு செய்ய 02.09.2024 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இணையதளம் வாயிலாக பதிவு செய்தவர்கள் மட்டுமே போட்டிகளில் கலந்து கொள்ள இயலும். நேரடியாக போட்டிகளில் கலந்துகொள்ள இயலாது. போட்டிகள் குறித்த விபரங்கள் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தற்போது கூடுதலாக ஸ்குவாஷ் விளையாட்டுப் போட்டி பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு சேர்க்கப்பட்டுள்ளது. நேரடியாக மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள மேற்கண்ட இணையத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு, “மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், மாவட்ட விளையாட்டரங்கம், தாடிக்கொம்பு ரோடு, திண்டுக்கல்” என்ற முகவரியில் நேரிலோ அல்லது 7401703504, 9865208374, 7904654177 என்ற கைப்பேசி எண்கள் வாயிலாக சம்பந்தப்பட்ட அலுவர்களை தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.