நிலக்கோட்டை வட்டம், விலாம்பட்டியில் சிறுவன் யோகேஸ்வரன் விபத்தில் காயமடைந்து உயிரிழந்ததையடுத்து, உடல் உறுப்புகள் தானம் கொடுக்கப்பட்டதையடுத்து, அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யும் விதமாக அன்னாரது உடலுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
செ.வெ.எண்:-81/2024
நாள்:-28.08.2024
திண்டுக்கல் மாவட்டம்
நிலக்கோட்டை வட்டம், விலாம்பட்டியில் சிறுவன் யோகேஸ்வரன் விபத்தில் காயமடைந்து உயிரிழந்ததையடுத்து, உடல் உறுப்புகள் தானம் கொடுக்கப்பட்டதையடுத்து, அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யும் விதமாக அன்னாரது உடலுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், விலாம்பட்டியைச் சேர்ந்த திரு.இளையராஜா என்பவர் மகன் யோகேஸ்வரன் (வயது 13) விபத்தில் சிக்கி, உயிரிழந்ததையடுத்து, அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளன. அதையடுத்து, விலாம்பட்டியில் இன்று(28.08.2024) நடைபெற்ற இறுதிச்சடங்கில் அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யும் விதமாக மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள், அன்னாரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகிறது. குடும்ப உறுப்பினர்கள் மூளைச்சாவு நிலையை அடைந்த துயரச் சூழலில் அவர்களின் உடல் உறுப்புகளைத் தானமாக அளித்திட முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற தியாகங்களால்தான் இந்தச் சாதனை சாத்தியமாகியுள்ளது. தம் உறுப்புகளை ஈந்து பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினை போற்றிடும் வகையில், தமிழகத்தில் இறந்த பின்னர் உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அவர்களின் இறுதிச்சடங்கில் அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், விலாம்பட்டியைச் சேர்ந்த திரு.இளையராஜா என்பவர் மகன் யோகேஸ்வரன்(வயது 13) என்ற சிறுவன் 26.08.2024 அன்று விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தார். அவர் மேல்சிகிச்சைக்காக மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் இன்று(28.08.2024) உயிரிழந்ததையடுத்து, அவரது கண்கள், சிறுநீரகங்கள் போன்ற உடல் உறுப்புகளை தானம் கொடுக்க அவரது குடும்பத்தினர் சம்மதித்ததையடுத்து, அவரது உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டன.
அதையடுத்து விலாம்பட்டியில் இன்று(28.08.2024) நடைபெற்ற யோகேஸ்வரன் இறுதிச்சடங்கில் அன்னாரது உடலுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் அரசு சார்பில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.செந்தில்குமார், நிலக்கோட்டை வட்டாட்சியர் திரு.தனுஷ்கோடி மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.