மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வத்தலகுண்டு பகுதி பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
செ.வெ.எண்:-27/2024
நாள்:-10.09.2024
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வத்தலகுண்டு பகுதி பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் 234 தொகுதிகளுக்கும் நேரடியாக சென்று பள்ளி கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகள், நூலகங்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்கள் ஆகிய இடங்களில் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றார்.
அதன்படி, திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அன்னை வேளாங்கண்ணி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியிலும், புனித தோமையார் தொடக்கப் பள்ளியிலும், அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் இன்று(10.09.2024) திடீர் ஆய்வு மேற்கொண்டார். எண்ணும் எழுத்தும் வகுப்பறை, வேதியியல் ஆய்வகம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு ஆசிரியர்கள், மாணவ, மாணவிகளிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள், “பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். அதிக மதிப்பெண்கள் பெற்று நல்ல துறையில் வல்லுனர்களாக சிறந்து விளங்க வேண்டும். ஆசிரியர்கள் தெரிவித்த கோரிக்கைகள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும், என தெரிவித்தார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.