மூடு

ரத்தசோகை இல்லாத கிராமங்களை உருவாக்குவதற்கான ஊட்டச்சத்து உணவு திருவிழாவை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா. பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து, பார்வையிட்டார்.

வெளியிடப்பட்ட தேதி : 26/09/2024
.

செ.வெ.எண்:-63/2024

நாள்:25.09.2024

திண்டுக்கல் மாவட்டம்

ரத்தசோகை இல்லாத கிராமங்களை உருவாக்குவதற்கான ஊட்டச்சத்து உணவு திருவிழாவை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா. பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து, பார்வையிட்டார்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுவினர் பங்கேற்ற ரத்தசோகை இல்லாத கிராமங்களை உருவாக்குவதற்கான ஊட்டச்சத்து உணவு திருவிழாவை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா. பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் இன்று(25.09.2024) தொடங்கி வைத்தார்.

இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

கிராமப்புறங்களில் உள்ள குழந்தைகள், வளர்இளம் பெண்கள், கர்ப்பிணிகள் மற்றும் முதியோர், பாலூட்டும் தாய்மார்கள் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் ரத்தசோகையினால் பாதிக்கப்படுகின்றனர். இவர்கள் மத்தியில் ஊட்டச்சத்து, உணவு பழக்க வழக்கங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் கிராம அளவில், வட்டார அளவில் சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவு பொருட்களை கொண்டு போட்டிகள் நடத்தப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 306 ஊராட்சிகளில் மற்றும் 14 வட்டாரங்களில் சுய உதவி குழுவினர்களை கொண்டு ரத்தசோகை இல்லாத கிராமங்களை உருவாக்குதல் குறித்த விழிப்புணர்வு மற்றும் சிறுதானிய உணவு திருவிழா நடைபெற்றது. இதில் அந்தந்த வட்டரங்களில் ஊராட்சிகளில் வெற்றி பெற்ற உதவி குழுவினரை கொண்டு 14 வட்டாரங்களிலும் நடத்தப்பட்ட போட்டிகளில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களில் வெற்றி பெற்ற சுய உதவிக் குழுவினர்களை கொண்டு இன்று(25.09.2024) மாவட்ட அளவிலான ஊட்டச்சத்து உணவு திருவிழாவில், பாரம்பரிய உணவுகளை தயாரித்து, அவை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான ஊட்டச்சத்து உணவு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது, என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

விழாவில், பழனி கோதைமங்கலம் வளனார் குழுவிற்கு முதல் பரிசாக ரூ.5,000, நத்தம் வேலம்பட்டி திருமலைகருப்பு குழுவிற்கு இரண்டாம் பரிசாக ரூ.4,000, திண்டுக்கல் தோட்டனுாத்து வெண்புறா குழுவிற்கு மூன்றாம் பரிசாக ரூ.3,000, ஆத்துார் பிள்ளையார்நத்தம் யமுனா குழு மற்றும் வேடசந்துார் நாகம்பட்டி மதிதாமரை குழு ஆகியவற்றிற்கு சிறப்புப் பரிசாக தலா ரூ.2,500, சாணார்பட்டி கோம்பைபட்டி திருமகள் குழு, ஒட்டன்சத்திரம் மார்க்கம்பட்டி வசந்தம் குழு மற்றும் வத்தலகுண்டு சந்தையூர் ரெட்ரோஸ் குழு ஆகியவற்றிற்கு ஆறுதல் பரிசாக தலா ரூ.2,000 வீதம் பரிசுத்தொகைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

இவ்விழாவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் திரு.சதீஸ்பாபு, உதவித் திட்ட அலுவலர்கள் திரு.ராம்குமார், திருமதி ஜீவ ரம்யா, திரு.வெற்றிச்செல்வன், திருமதி பிரியங்கா உட்பட துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.