“தேசிய வாக்காளர் தினம்-2025“-ஐ முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற தேர்தல் விழிப்புணர்வு தொடர்பான வினாடி-வினா போட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
செ.வெ.எண்:-02/2024
நாள்:-05.11.2024
திண்டுக்கல் மாவட்டம்
“தேசிய வாக்காளர் தினம்-2025“-ஐ முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற தேர்தல் விழிப்புணர்வு தொடர்பான வினாடி-வினா போட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், “தேசிய வாக்காளர் தினம்-2025“-ஐ முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற தேர்தல் விழிப்புணர்வு தொடர்பான வினாடி-வினா போட்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(05.11.2024) நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரில், “தேசிய வாக்காளர் தினம்-2025“-ஐ முன்னிட்டு பள்ளிகளில் பயிலும் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு இணையதளம் (Online) வாயிலாக தேர்தல் விழிப்புணர்வு தொடர்பான வினாடி-வினா நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது.
இந்த போட்டிக்கு திண்டுக்கல் மாவட்ட மாணவ, மாணவிகளை தேர்வு செய்வதற்காக, திண்டுக்கல் மாவட்ட அளவிலான வினாடி-வினா போட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள் ஒரு குழுவிற்கு 2 மாணவர்கள் வீதம் 100 பேர் கலந்துகொண்டனர். இதில் முதலிடம் பெறும் 2 அணிகள் (ஒரு அணிக்கு 2 மாணவர்கள்) தேர்வு செய்யப்பட்டு, மண்டல அளவில் நடைபெறும் போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர்.
மண்டல அளவிலான போட்டி இணையதளம் வாயிலாக(Online) நடத்தப்படும். அதில் வெற்றிபெறும் அணிகள் அரையிறுதிப் போட்டியில் கலந்துகொள்ளும். மண்டல மற்றும் அரையிறுதி நிலை போட்டி 13.11.2024 அன்று நடத்தப்படவுள்ளது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சே.ஹா. சேக்முகையதீன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.மு.கோட்டைக்குமார், தேர்தல் வட்டாட்சியர் திரு.முத்துராமன், தேர்தல் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.