தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ்,கூட்டாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவின் மூலம் உணவு, ஊட்டச்சத்து, உடல் நலம் மற்றும் சுகாதாரம் பேணுதல் தொடர்பாக விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
செ.வெ.எண்:-23/2024
நாள்:-12.11.2024
திண்டுக்கல் மாவட்டம்
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ்,கூட்டாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவின் மூலம் உணவு, ஊட்டச்சத்து, உடல் நலம் மற்றும் சுகாதாரம் பேணுதல் தொடர்பாக விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், கூட்டாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவின் (FNHW) மூலம் உணவு, ஊட்டச்சத்து, உடல் நலம் மற்றும் சுகாதாரம் பேணுதல், தேசிய அளவிலான இரத்த சோகை வளர்ச்சியினை கண்காணித்தல், இணை உணவு அளித்தல், மரக்கன்று நடுதல் மற்றும் சிறந்த நிர்வாகத்திற்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மாவட்டம், வட்டாரம் மற்றும் கிராம ஊராட்சி அளவில் 12.11.2024 முதல் 22.11.2024 வரை மேற்கொள்ளப்படவுள்ளது.
அதன்படி, கிராம அளவிலான விழிப்புணர்வு பிரச்சாரம் இன்று(12.11.2024) மேற்கொள்ளப்பட்டது. ஊராட்சி அளவிலான விழிப்புணர்வு பிரச்சாரம் 13.11.2024 அன்று உணவு, ஊட்டச்சத்து, உடல்நலம், தன் சுத்தம் மற்றும் சுகாதாரம் பேணுதல் தொடர்பான விழிப்புணர்வு பேரணி, ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பங்கேற்புடன் நடைபெறவுள்ளது. மேலும் 19.11.2024 அன்று ஊராட்சி அளவில் மனிதச்சங்கிலி நிகழ்ச்சி, மேலும் 19.11.2024 அன்று பள்ளி அளவில் பேச்சு போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி மற்றும் நாடகப் போட்டி நடத்துதல். 21.11.2024 அன்று விழிப்புணர்வு பேரணி, 22.11.2024 அன்று கல்லுாரி அளவில் பேச்சு போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி மற்றும் நாடகப் போட்டி மற்றும் குழு கருத்தரங்குகள் நடத்தி விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன, என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.