சின்னாளப்பட்டி பேரூராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
செ.வெ.எண்:-06/2025
நாள்:-03.05.2025
திண்டுக்கல் மாவட்டம்
சின்னாளப்பட்டி பேரூராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி பேரூராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(03.05.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
சின்னாளப்பட்டியில் உள்ள அன்னை சத்யா மகளிர் தையல் தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தில் அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சீருடை தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, சின்னாளப்பட்டி பேரூராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.2.43 கோடி மதிப்பீட்டில் பேருந்து நிலையம் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பேருந்து நிலையத்தில் கடைகள் கட்டும் பணிகள் முடிவடைந்த நிலையில், கழிப்பறைகள் மற்றும் மிதிவண்டி நிறுத்துமிடம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகளை தரமாக விரைந்து முடிக்க மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி கோ.புஷ்பகலா மற்றும் துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.