மூடு

2026-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கான தகுந்த கருத்துருக்களை இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட தேதி : 10/05/2025

செ.வெ.எண்:-33/2025

நாள்:-09.05.2025

திண்டுக்கல் மாவட்டம்

2026-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கான தகுந்த கருத்துருக்களை இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

தேசத்தின் உயரிய அங்கீகாரமிக்க விருதான பத்ம விருதுகள்-2026, கலை, இலக்கியம், விளையாட்டு, சமூகசேவை, கல்வி, மருத்துவம், பொதுவிவகாரம் போன்ற துறைகளில் நீண்ட நாட்களாக சிறந்த பங்களிப்பினை செய்து வரும் நபர்களுக்கு ஆண்டுதோறும் குடியரசுதினத்தன்று வழங்கப்படுகிறது.

பால், இனம், மதம் பேதமின்றி தேசத்தின் அனைத்து குடிமக்களுக்கும் சம உரிமை தந்து சேவைக்கும், திறமைக்கும் மட்டுமே மதிப்பளித்து இவ்விருது வழங்கப்படுகிறது. எனவே, 2026-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கான தகுந்த கருத்துருக்கள் வரவேற்கப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் கலை, இலக்கியம், விளையாட்டு, சமூகசேவை, கல்வி, மருத்துவம், பொதுவிவகாரம் போன்ற துறைகளில் சிறந்த பங்களிப்பினை செய்து வரும் தனிநபர்கள் தங்களின் கருத்துருக்களை https://awards.gov.in என்ற இணையதளத்தில் 31.05.2025 தேதிக்குள் பதிவு செய்து, அசல் கருத்துருவினை, “மாவட்ட சமூக நல அலுவலகம், அறை எண்:88, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், திண்டுக்கல்“ என்ற முகவரியில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வெண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.