பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் (செப்-15) முன்னிட்டு 03.09.2025 அன்றும், தந்தை பெரியார் பிறந்தநாள் (செப் -17) முன்னிட்டு 04.09.2025 அன்றும் மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே நடைபெற்ற பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிச
செ.வெ.எண்:-60/2025
நாள்:-15.09.2025
திண்டுக்கல் மாவட்டம்
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் (செப்-15) முன்னிட்டு 03.09.2025 அன்றும், தந்தை பெரியார் பிறந்தநாள் (செப் -17) முன்னிட்டு 04.09.2025 அன்றும் மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே நடைபெற்ற பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2021-22ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லுாரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படவேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இவ்வறிவிப்பின்படி 2025-2026ஆம் நிதியாண்டில் திண்டுக்கல், புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் (செப்-15) முன்னிட்டு பேச்சுப்போட்டி 03.09.2025 (புதன்கிழமை) அன்றும், தந்தை பெரியார் பிறந்தநாள் (செப்-17) முன்னிட்டு பேச்சுப்போட்டி 04.09.2025 (வியாழன் கிழமை) அன்றும் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பள்ளிகளில் (6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை) பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக உரிய வழிமுறைகளை பின்பற்றி பள்ளி மாணவர்களுக்கு காலை 10.00 மணி முதலும், கல்லூரி மாணவர்களுக்கு பிற்பகல் 2.00 மணி முதலும் பேச்சுப் போட்டி நடைபெற்றன.
பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 03.09.2025 அன்று நடைப்பெற்ற பள்ளி மாணவர்களிடையேயான பேச்சுப்போட்டியில் கம்பிளியம்பட்டி அரசு மேனிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவி சு.பவித்ரா முதற்பரிசும், பழநி, சண்முகபுரம் அரசு நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவி தி .அன்புமதி இரண்டாம் பரிசும், திண்டுக்கல் மரியன்னை மேனிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு செ.மனோஜ் மூன்றாம் பரிசும், இரா,வெள்ளோடு அரசு மேனிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவி ச.ஸ்ரீமதியும்,அழகாபுரி அரசு மேனிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு ம.நதியாயும் சிறப்பு பரிசும் பெற்றனர். கல்லூரி மாணவர்களிடையேயான பேச்சுப்போட்டியில் திண்டுக்கல் எம்வி.முத்தையா அரசு மகளிர் கலைக் கல்லூரியில் முதுநிலை விலங்கியல் முதலாம் ஆண்டு மாணவி வெ.மோகனப்பிரியா முதல் பரிசும், திண்டுக்கல் எஸ்.எஸ்.எம்.பொறியியல் (ம) தொழில்நுட்ப கல்லூரி இளநிலை தொழில்நுட்பம் மூன்றாம் பயிலும் மாணவன் ப.விமல் சாஸ்தா இரண்டாம் பரிசும், ஒட்டன்சத்திரம் அருள்மிகு பழநியாண்டவர் மகளிர் கலை (ம) அறிவியல் கல்லூரி இளங்கலை கணினி அறிவியல் இரண்டாமாண்டு ஆ.கிருத்திகா மூன்றாம் பரிசும் பெற்றனர். தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 04.09.2025அன்று நடைப்பெற்ற பள்ளி மாணவர்களிடையேயான பேச்சுப்போட்டியில் வடமதுரை அரசு மகளிர் மேனிலைப் பள்ளியில் 12 ஆம்வகுப்பு பயிலும் தி.காவ்யா முதல்பரிசும், தாழையூத்து அரசு மேனிலைப் பள்ளியில் 6ஆம் வகுப்பு பயிலும் மாணவன் மு.குகன் இரண்டாம் பரிசும், இரா.புதுக்கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு பயிலும் மாணவி ரா.கவிதா மூன்றாம் பரிசும் , விருவீடு, அரசு மாதிரி மேனிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு மாணவி ஜெ.ஜெயபாரதியும், வேடசந்தூர் அரசு மகளிர் மேனிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவி ந.கனகஸ்ரீநித்யாயும் சிறப்புப் பரிசும் பெற்றனர். கல்லூரி மாணவர்களிடையேயான பேச்சுப்போட்டியில் திண்டுக்கல், எம்.வி.முத்தையா அரசு மகளிர் கலைக் கல்லூரியில் இளங்கலை தமிழ் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவி ப.சாதனா முதல் பரிசும், திண்டுக்கல் மதுரை காமராஜர் பல்பலைக் கழகம், மாலை நேரக் கல்லூரியில் முதுகலைத் தமிழ் முதலாமாண்டு, ஜோ. கேத்ரின் மெர்லினா இரண்டாம் பரிசும், திண்டுக்கல் ஜி.டி.என். கலைக் கல்லூரியில் முதுநிலை வேதியியல் முதலாமாண்டு பயிலும் மாணவி அ.சுஹசினி மூன்றாம் பரிசும் பெற்றனர்.
பேரறிஞர் அண்ணா மற்றும் தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு நடத்தப்பெற்ற பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.5000/-, இரண்டாம் பரிசு ரூ.3000/-, மூன்றாம் பரிசு ரூ.2000/- என்ற வகையிலும், பள்ளிப் பேச்சுப் போட்டிகளில் பங்கு பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000/-, இரண்டாம் பரிசு ரூ.3000/-, மூன்றாம் பரிசு ரூ.2000/- என்ற வகையிலும் பரிசுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் திரு. பெ.இளங்கோ அவர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.