மூடு

திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் தேசிய நெடுஞ்சாலைத்துறை மற்றும் வனத்துறையுடன் இணைந்து பசுமை தமிழ்நாடு இயக்கம் மற்றும் திண்டிமாவனம் மரக்கன்றுகள் நடும் விழா மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட தேதி : 18/09/2025
.

செ.வெ.எண்:-68/2025

நாள்:-17.09.2025

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் தேசிய நெடுஞ்சாலைத்துறை மற்றும் வனத்துறையுடன் இணைந்து பசுமை தமிழ்நாடு இயக்கம் மற்றும் திண்டிமாவனம் மரக்கன்றுகள் நடும் விழா மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் தேசிய நெடுஞ்சாலைத்துறை மற்றும் வனத்துறையுடன் இணைந்து பசுமை தமிழ்நாடு இயக்கம் மற்றும் திண்டிமாவனம் மரக்கன்றுகள் நடும் விழா மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (17.09.2025) நடைபெற்றது.

மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தாவது,

மனித குல வரலாற்றில் இயற்கை என்பது மிக முக்கியமான ஒன்று, இயற்கை படைப்புகளின் ஒரு அங்கம் தான் மனிதர்கள். இயற்கையை பாதுகாப்பது மிக முக்கியமான கடமையாகும். சாலைகள் அமைத்தல், தொழிற்சாலைகள் அமைத்தல், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற செயல்களால் சுற்றுச்சூழல் பாதிப்படைகிறது. இதனை ஈடு செய்யும் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னேற்பாடு பணிகளை செயல்படுத்தி வருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பசுமை தமிழ்நாடு இயக்கத்தை முன்னெடுத்துள்ளார்கள். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் (Green Tamilnadu Mission) “திண்டிமாவனம்” என்ற பெயரில் திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தமாக 30 இலட்சம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளது.

முதற்கட்டமாக தேசிய நெடுஞ்சாலைத்துறையுடன் இணைந்து வனத்துறை மற்றும் பள்ளி மாணவர்கள் சேர்ந்து மொத்தம் 15,000 மரக்கன்றுகள் நடும் வகையில் மிகப் பெரிய முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனையொட்டி இன்று (17.09.2025) 8000 மரக்கன்றுகள் நட்டு வருகின்றனர். புகை மற்றும் காற்று மாசுபாட்டை குறைப்பதற்காக சாலையின் நடுவே மரங்கள் நடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஒரு குழந்தையை எப்படி பெரிய மனிதர்களாக பராமரித்து வளர்த்து வருகிறோமோ அப்படித்தான் ஒரு மரத்தையும் விதையிலிருந்து நல்ல முறையில் பராமரித்து பெரிய அளவில் வளர்த்து வர வேண்டும். ஆலமரம், நாவல் மற்றும் பனை மரம் போன்ற அதிக வருடம் வளரும் மரங்களை நட்டு வளர்க்க வேண்டும் என தெரிவித்தார். ஒரு குழந்தைக்கு இணையாக மரங்களை வளர்த்து இயற்கையை பாதுகாக்க வேண்டுமென மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து திண்டுக்கல்-மதுரை நெடுஞ்சாலையில் பெருமாள்கோவில் பட்டியில் 300 கடற்படை மரக்கன்றுகள், 300 புங்கன் மரக்கன்றுகள், 300 வேம்பு மரக்கன்றுகள், 400 செங்குன்றம் மரக்கன்றுகள் என மொத்தம் 1300 மரக்கன்றுகளை நட்டு வைத்தார். மேலும் சாலைகளின் நடுவே 6500 நாகசெம்பகம் மரக்கன்றுகள் என மொத்தம் 7800 மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

பின்னர் திண்டுக்கல்-திருச்சி நெடுஞ்சாலையில் இ.பி.காலனியில் 150 நாவல் மரக்கன்றுகள், 150 புங்கை மரக்கன்றுகள், 200 மகா கன்னி மரக்கன்றுகள், 400 மஞ்சள் அரலி மரக்கன்றுகள் என மொத்தம் 900 மரக்கன்றுகளை மாவட்ட ஆட்சித்தலைவர்கள் அவர்கள் நட்டு வைத்தார்கள்.

இவ்விழாவில் இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை மதுரை மண்டல அதிகாரி திரு.கோவிந்தசாமி, திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் திரு.ராஜ் குமார்,இ.வ.ப., திட்ட இயக்குநர் (இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை மதுரை மண்டலம்) கீர்த்தி பரத்வாஜ், திட்ட இயக்குநர் (இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை திருச்சி) பிரவீன்குமார் மற்றும் துறை அலுவலர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.