மூடு

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.24 இலட்சம் மதிப்பீட்டில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளர் உடன்வருவோர் காத்திருப்பு அறைகளை திறந்து வைத்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 18/09/2025
.

செ.வெ.எண்:-70/2025

நாள்: 17.09.2025

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.24 இலட்சம் மதிப்பீட்டில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளர் உடன்வருவோர் காத்திருப்பு அறைகளை திறந்து வைத்தார்.

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் இன்று (17.09.2025) திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் அவர்கள் தலைமையில், பழனி சட்டமன்ற உறுப்பினர் இ.பெ.செந்தில்குமார் அவர்கள் முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.24 இலட்சம் மதிப்பீட்டில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளர் உடன்வருவோர் காத்திருப்பு அறைகளை திறந்து வைத்தார்கள்.

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் தலா ரூ.12 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.24 இலட்சம் மதிப்பீட்டில் இரண்டு நோயாளர் உடன்வருவோர் ஆண்கள் மற்றும் பெண்கள் காத்திருப்பு அறைகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் திறந்து வைத்தார். இந்த காத்திருப்பு அறைகளில் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் தனித்தனியாக காத்திருப்பு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு காத்திருப்பு அறைகளிலும் 50 நபர்கள் அமர்ந்திருக்கும் வகையில் இடவசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் தனித்தனியாக குளியலறை, கழிப்பறை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.சக்திவேல், திண்டுக்கல் மாநகராட்சி வணக்கத்திற்குரிய மேயர் திருமதி இளமதி ஜோதிபிரகாஷ் அவர்கள், துணை மேயர் ராசப்பா, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.வீரமணி, துணை மருத்துவ கண்காணிப்பாளர் மரு.சுரேஷ்பாபு, ENT நிலைய மருத்துவர் மரு.செந்தில் குமார் மற்றும் துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.