மூடு

‘Coffee with Collector’ – புற்றுநோய் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்திய தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப

வெளியிடப்பட்ட தேதி : 23/09/2025
.

செ.வெ.எண்:-85/2025

நாள்:-22.09.2025

திண்டுக்கல் மாவட்டம்

‘Coffee with Collector’ – புற்றுநோய் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்திய தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை பிற்பகல் ‘Coffee with Collector’ எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கடந்த 30.06.2025 அன்று முதல் 15.09.2025 வரை 12 நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இந்நிகழ்ச்சிகளில் இதுவரை பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சார்ந்த 275 மாணவ/மாணவியர், தலைமையாசிரியர்/ஆசிரியர்கள் 25 பேர் மற்றும் பிறதுறைகளைச் சார்ந்த 50 நபர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இன்று (22.09.2025) ‘உலக ரோஜா தினம்’ அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு புற்றுநோய் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்திய தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் பதின்மூன்றாவது நிகழ்வாக ‘Coffee with Collector’ எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின்போது புற்றுநோய் பாதித்தவர்களுக்கான சிகிச்சை மற்றும் தொடர்நடவடிக்கைகள் சார்ந்து தமிழ்நாடு அரசு மேற்கொண்டுவரும் முன்னெடுப்புகள் குறித்து மாவட்ட ஆட்சியர் எடுத்துரைத்தார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மருத்துவர்கள், செவிலியர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் தங்கள் கருத்துக்ளைப் பகிர்ந்து கொண்டனர். புற்றுநோயால் பாதிக்கப்பட்டோரில் சிலர் தாங்கள் சிகிச்சை எடுத்துக்கொண்டால் நோய் முழுவதும் சரி ஆகிவிடுமா என சந்தேகத்துடன் கேட்பதாகவும், பாதி சிகிச்சையிலேயே தொடர் கண்காணிப்பிற்கு ஒத்துழைக்காமல் சென்று விடுவதாகவும், ஆரம்பத்திலேயே நோய்தொற்று இருப்பதை கண்டறிய இயலாத சிலவகை புற்றுநோய்களுடன் இருப்பதாகவும், சிகிச்சை பெற தயக்கம் காட்டுவதாகவும் தெரிவித்தனர். சுகாதாரத் துறையில் பணியாற்றுவோருக்கும் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், புற்றுநோயியல் நிபுணர் நியமனம் மிக அத்தியாவசியத் தேவை எனவும் வேண்டுகோள் விடுத்தனர். மாவட்ட ஆட்சியர் பேசுகையில், பொதுமக்களிடம் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு அவசியம் ஏற்படுத்தப்பட வேண்டும், சிகிச்சை முறைகள் மீதான நம்பிக்கை முக்கியம், புகையிலைப் பொருட்கள் பயன்பாட்டினை கட்டுப்படுத்துவதற்காக மாவட்ட நிர்வாகம் எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும், போதை மீட்பு மற்றும் மனநல சிகிச்சைக்கான ‘கலங்கரை திட்டம்’ பற்றியும், பள்ளி, கல்லூரிகளில் மேற்கொள்ள வேண்டிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பள்ளி மேலாண்மைக் குழுக்கள், பெற்றோருக்கான நிகழ்ச்சிகள் நடத்துதல், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்ளுடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக அரசு மருத்துவமனைகளில் சில திட்டங்களைச் செயல்படுத்துதல் தொடர்பாகவும், மாவட்டம் முழுவதும் புற்றுநோய் கண்டறிதல் / தடுப்பூசி முகாம்கள் நடத்துதல் சார்பாகவும் பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

இந்தநிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) மரு.ச.வினோதினி, இ.ஆ.ப., துணை இயக்குநர் (காசநோய் பாதிப்பு) திரு.எம்.முத்துப்பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.