மதி அங்காடியினை நடத்துவதற்கு மகளிர் சுய உதவிக்குழுக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் தகவல்
செ.வெ.எண்:-102/2025
நாள்:-25.09.2025
திண்டுக்கல் மாவட்டம்
மதி அங்காடியினை நடத்துவதற்கு மகளிர் சுய உதவிக்குழுக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் தகவல்
மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கலையரங்கம் மெயின் ரோடு அருகில் அமைக்கப்பட்டுள்ள மதி அங்காடியினை நடத்துவதற்கு மகளிர் சுய உதவிக் குழுக்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெற்று அவற்றில் தகுதியான சுய உதவிக் குழுவினை தேர்வு செய்யப்படவுள்ளது.
தகுதிகள்:
·அங்காடி அமைந்துள்ள உள்ளாட்சி அமைப்பு பகுதியில் உள்ள சுய உதவிக்குழு/ கூட்டமைப்பை மட்டுமே தேர்வு செய்யப்படும். தகுதியுள்ள சுய உதவிக்குழுக்கள் இல்லை எனில் சம்பந்தப்பட்ட குழு கூட்டமைப்பு தீh;மானத்தின் அடிப்படையில் மதி அங்காடி அமைந்துள்ள உள்ளாட்சி அமைப்புக்கு அருகாமையில் உள்ள வேறு மகளிர் குழுவினரை தேர்வு செய்யப்படும்.
· தேர்வு செய்யப்படும் மகளிர் சுய உதவிக்குழு, அப்பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி அளவிலான/ பகுதி அளவிலான கூட்டமைப்பில் உறுப்பினராக இருத்தல் வேண்டும். தேர்வு செய்யப்படும் சுய உதவிக்குழு தேசிய ஊரக/ நகர்ப்புற வாழ்வாதார இணையத்தில் பதிவு பெற்றிருத்தல் அவசியம். பொருட்கள் உற்பத்தி/ விற்பனையில் ஆர்வம் மற்றும் முன் அனுபவம் உடைய சுய உதவிக் குழுக்களாக இருத்தல் வேண்டும்.
· மாற்றுத்திறனாளி/ நலிவுற்றோர் சுய உதவிக் குழுக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விண்ணப்பிக்கும் சுய உதவிக்குழு தரமதிப்பீட்டில் தேர்ச்சி பெற்று இருப்பதுடன், குறைந்தது ஒரு வங்கிக்கடன் இணைப்பாவது பெற்றிருத்தல் வேண்டும். சுய உதவிக்குழு தொடங்கி ஓர்ஆண்டு பூர்த்தி செய்திருக்க வேண்டும். சுய உதவிக்குழு மீது எந்தவித புகார்களும் இல்லை என்பதற்கான சான்றினை சம்மந்தப்பட்ட வட்டார இயக்க மேலாளர்/ சமுதாய அமைப்பாளரிடமிருந்து பெற்று விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
· தேர்வு செய்யப்படும் சுய உதவிக்குழு உரிமை கொண்டாட இயலாது. மதி அங்காடியின் உரிமை மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கத்திடமே இருக்கும். அங்காடி நடத்துவதற்கான வாய்ப்பு 6 மாதங்களுக்கு மட்டுமே வழங்கப்படும். சுய உதவிக்குழுவின் விற்பனை அளவு மற்றும் செயல்பாட்டு திறன் அடிப்படையில் தொடர்ந்து மதி அங்காடி நடத்த அனுமதி வழங்குவது குறித்து பரிசீலிக்க மாவட்ட அளவிலான குழுவால் இறுதி முடிவு எடுக்கப்படும்.
எனவே, மேற்காணும் விதிமுறைகளின்படி தகுதியான சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தங்களுடைய விண்ணப்பங்களை இணை இயக்குநர்/ திட்ட இயக்குநர் அறை எண்:28, (தரை தளம்) தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், (மகளிர் திட்டம்) மாவட்ட ஆட்சியரக வளாகம், திண்டுக்கல் என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ 07.10.2025-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.