மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.1.19 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, ரூ.19
செ.வெ.எண்:-12/2025
நாள்:-07.10.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.1.19 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, ரூ.19.29 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.1.19 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, ரூ.19.29 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிக்கு இன்று (07.10.2025) அடிக்கல் நாட்டினார்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம், திருமலைக்கவுண்டன்வலசில் அனைத்து கிராம் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் ரூ.16.55 இலட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம், பூசாரிபட்டியில் அனைத்து கிராம் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் ரூ.12.70 இலட்சம் மதிப்பீட்டில் நியாயவிலைக்கடை, மேட்டுப்பட்டியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை, மேட்டுப்பட்டியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின்கீழ் ரூ.30.00 இலட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலகம், வேலம்பட்டியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின்கீழ் ரூ.30.00 இலட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலகம், வேலம்பட்டியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை, நல்லிகவுண்டன்வலசில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின்கீழ் ரூ.09.97 இலட்சம் மதிப்பீட்டில் நியாயவிலைக்கடை என மொத்தம் ரூ.1.19 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
அதனைத்தொடர்ந்து, பாறைவலசு முதல் நீலகவுண்டன்பட்டி – பொட்டிக்காம்பட்டி வரை ரூ.1.80 கோடி மதிப்பீட்டில் சாலை தரம் உயர்த்தும் பணி, வெள்ளைகவுண்டன்புதூர் முதல் பெரியகோட்டை சாலை வரை முதல்வரின் கிராமச்சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் ரூ.46.88 இலட்சம் மதிப்பீட்டில் சாலை தரம் உயர்த்தும் பணி, வெள்ளைகவுண்டன்புதூர் பெரியகோட்டை சாலை முதல் கே.கே.குப்பச்சாமி தோட்டம் வரை முதல்வரின் கிராமச்சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் ரூ.25.10 இலட்சம் மதிப்பீட்டில் சாலை தரம் உயர்த்தும் பணி, மஞ்சநாயக்கன்பட்டி, கள்ளிமந்தையம் சாலை முதல் கப்பல்பட்டி பி.ஜி வரை முதல்வரின் கிராமச்சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் 57.18 இலட்சம் மதிப்பீட்டில் சாலை தரம் உயர்த்தும் பணி, கரியாம்பட்டி வடக்கு சாலை முதல் கொல்லபட்டி வலசு – வீரப்பகவுண்டன் வலசு வரை சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் ரூ.49.00 இலட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்படுத்தும் பணி, கரியாம்பட்டி ஆதிதிராவிடர் காலனி முதல் கூலசின்னாம்பட்டி, வேலங்கல்பட்டி சாலை வரை ரூ.75.60 இலட்சம் மதிப்பீட்டில் சாலை தரம் உயர்த்தும் பணி, கரியாம்பட்டி பிஜி முதல் கூலச்சின்னாம்பட்டி, கீரனூர் சாலை வரை ரூ.42.50 இலட்சம் மதிப்பீட்டில் சாலை தரம் உயர்த்தும் பணி,கரியாம்பட்டி மெயின் சாலை முதல் கரியாம்பட்டி அம்மாபட்டி சாலை வரை ரூ.52.70 இலட்சம் மதிப்பீட்டில் சாலை தரம் உயர்த்தும் பணி,கூலச்சின்னாம்பட்டி முதல் கீரனூர் (வழி) தெற்கு திட்டுப்பாறை தோட்டம் வரை ரூ.51.20 இலட்சம் மதிப்பீட்டில் சாலை தரம் உயர்த்தும் பணி,சின்னநாச்சியப்பகவுண்டன்வலசு சாலை ரூ.45.70 இலட்சம் மதிப்பீட்டில் சாலை தரம் உயர்த்தும் பணி,அப்பியம்பட்டி- தண்ணீர் பந்தல் முதல் மோதுபட்டி சாலை வரை சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் ரூ.84.00 இலட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்படுத்தும் பணி, பெருமாள்கவுண்டன்வலசு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு ரூ.36.00 இலட்சம் மதிப்பீட்டில் இரண்ட வகுப்பறைகள் கட்டும் பணிகள், பருத்தியூர் முதல் பருத்தியூர் எல்லை வரை ரூ.2.11 கோடி மதிப்பீட்டில் சாலை தரம் உயர்த்தும் பணி, வடபருத்தியூர் ஆதிதிராவிடர் காலனி முதல் பாலப்பன்பட்டி செல்லும் சாலை வரை ரூ.3.45 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி, வடபருத்தியூர் மேற்கு ஆதிதிராவிடர் காலனி முதல் தள்ளிபாளையம் சாலை வரை ரூ.27.60 இலட்சம் மதிப்பிட்டில் சாலை தரம் உயர்த்தும் பணி, மேட்டுப்பட்டி முதல் பெருமாள்நாயக்கன்வலசு சாலை வரை சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் ரூ.98.30 இலட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்படுத்தும் பணி, காட்டமநாயக்கன்வலசு – தீர்ககவுண்டன்வலசு சாலை வரை சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் ரூ.75.70 இலட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டு பணி, வாகரை மெயின் சாலை முதல் இச்சிமடைக்குளம் வரை ரூ.50.40 இலட்சம் மதிப்பீட்டில் சாலைகள் தரம் உயர்த்தும் பணி, பூசாரிகவுண்டன்வலசில் ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை அமைக்கும் பணி, வேலம்பட்டி-தேவகவுண்டன்வலசு சாலை முதல் வேலம்பட்டி-கூத்தம்பூண்டி சாலை வரை சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் ரூ.63.20 இலட்சம் மதிப்பீட்டில் சாலை தரம் உயர்த்தும் பணி, சின்னவேலம்பட்டி அருகில் சிவசாமி தோட்டம் முதல் புங்கமுத்தூர் சாலை வரை ரூ.49.20 இலட்சம் மதிப்பீட்டில் சாலை தரம் உயர்த்தும் பணி, சின்னவேலம்பட்டி முதல் மைனர் தோட்டம் வரை ரூ.32.14 இலட்சம் மதிப்பீட்டில் சாலை தரம் உயர்த்தும் பணி, புங்கமுத்தூர், நல்லிகவுண்டன்வலசு சாலை முதல் புங்கமுத்தூர் வேலம்பட்டி சாலை வரை சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் ரூ.49.70 இலட்சம் மதிப்பீட்டில் சாலைகள் மேம்பாட்டு பணிகள், அப்பனூத்து முதல் தேர்பட்டி சாலை வரை சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.1.13 கோடி மதிப்பீட்டில் சாலைகள் மேம்பாட்டு பணி, முனியப்பன் கோவில் முதல் உப்பிளியகாட்டு தோட்டம் சாலை வரை ரூ.57.50 இலட்சம் மதிப்பீட்டில் சாலைகள் தரம் உயர்த்தும் பணிகள் என மொத்தம் ரூ.119.22 கோடி மதிப்பிட்டிலான திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பேசியதாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.
ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகள் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப்பணிகள் முடியும் தருவாயில் உள்ளன.
பெண்களின் நலனுக்காக நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளும் விடியல் பயணத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் வாயிலாக வேலைக்குச் செல்லும் ஒவ்வொரு பெண்ணிற்கும் மாதம் ரூ.900 வரை சேமிப்பு ஏற்படுகிறது.
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் போன்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தில் 1.16 கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும், தகுதியான நபர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறியும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமை தொடங்கி வைத்துள்ளார்கள். தமிழ்நாடு முழுவதும் 10,000 முகாம்கள் நடத்தப்படவுள்ளன.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் சுமார் 18.00 இலட்சம் குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டம் இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லை. தமிழ்நாட்டில்தான் செயல்படுத்தப்படுகிறது.
6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்(தமிழ் வழிக்கல்வி) படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் தமிழ்நாட்டில் பெண்கள் உயர்கல்வி படிப்பது உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் வாயிலாக சுமார் 5 இலட்சம் மாணவிகள் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர். இதேபோல் மாணவர்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
பொதுமக்கள், விவசாயிகள், மாணவ, மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் அவர்களின் எண்ணங்கள், எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கையை பூர்த்தி செய்யும் விதமாக எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி பொற்கால ஆட்சி நடத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கரங்களை வலுப்படுத்தும் விதமாக என்றென்றும் உறுதுணையுடன் இருக்க வேண்டும் என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.கண்ணன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு.ஜி.ட்டி.ஸ்ரீ ராகவ் பாலாஜி, ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் திரு.சஞ்சைகாந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி தாஹிரா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.