திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த அரசு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் அமைந்துள்ள அணுமின் நிலையத்தினை பார்வையிடுவதற்கு சுற்றுலா களபயணம் வாகனத்தினை மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி அவர்கள் கொடியசைத்து த
செ.வெ.எண்:-54/2025
நாள்: 23.10.2025
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த அரசு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் அமைந்துள்ள அணுமின் நிலையத்தினை பார்வையிடுவதற்கு சுற்றுலா களபயணம் வாகனத்தினை மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
திண்டுக்கல் மாவட்ட நிர்வாகமும் பள்ளிக் கல்வித்துறையும் இணைந்து அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் அறிவியல் ஆர்வத்தினை அதிகப்படுத்துவதற்காகவும், உயர் கல்வி பயில்வதற்குரிய விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்காகவும் அவ்வப்போது களப்பயணங்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
அதன்படி, ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து நாசா-இஸ்ரோ செயற்கை துளை ரேடார் (நிசார்), இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி.-எப்16 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டதை 50 மாணவ, மாணவிகள் நேரில் பார்வையிட்டு வந்தனர். மேலும், அரசு பள்ளியில் பயிலும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள மகேந்திரகிரி இஸ்ரோ ஆய்வு மையத்தை பார்வையிடுவதற்கு சுற்றுலா களப்பயணம். அதனைத்தொடர்ந்து, திண்டுக்கல் பழனி ரோடு அரசு மேல்நிலைப்பள்ளியிலிருந்து திண்டுக்கல் கல்வி சார் களப்பயணம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, எம்.வி.எம் கல்லூரி, பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரி மற்றும் ரெட்டியார்சத்திரம் இந்தியா-இஸ்ரேல் காய்கறி சிறப்பு மையம் (Centre of Excellence for Vegetables) உட்பட பல்வேறு இடங்களை பார்வையிட்டு 300 அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கல்வி சுற்றுலாப்பயணம் மேற்கொண்டனர்கள்.
அதனைத்தொடர்ந்து, இன்று(23.10.2025) திண்டுக்கல் மாவட்ட நிர்வாகமும் பள்ளிக் கல்வித்துறையும் இணைந்து அரசு பள்ளிகளில் பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளின் அறிவியல் ஆர்வத்தினை அதிகப்படுத்துவதற்காகவும், உயர் கல்வி பயில்வதற்குரிய விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்காகவும் திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் அமைந்துள்ள அணுமின் நிலையத்தினை 45 பள்ளிகளில் இருந்து 47 மாணவ, மாணவிகள் பார்வையிடுவதற்கு திட்டமிடப்பட்ட, அறிவியல் களப்பயணத்தினை மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் துணை ஆட்சியர் (பயிற்சி) திருமிகு.மு.ராஜேஸ்வரி சுவி, மாவட்ட ஆட்சியரின் தனிஉதவியாளர் (கல்வி) திரு.சரவணன், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.A.சுதாகர், நான்கு களப்பயண பொறுப்பு ஆசிரியர்கள் மற்றும் களப்பயண உதவியாளர் ஆகியோர் உடனிருந்தனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.